பொங்கல் வெளியீடாக ‘தலை 54’

ajithkumarதலைப்பைப் பார்த்து எதுவும் குழம்பிப் போய்விட வேண்டாம். அஜித் இப்ப நடிச்சிட்டிருக்கிற இரண்டு படத்துக்குமே இன்னும் பெயர் வைக்கலை.

விஷ்ணுவர்தன் இயக்கத்துல அவர் நடிக்கிற படம் அஜித்துக்கு 53வது படம், அதனால ‘தலை 53’. இந்த படத்துக்கப்புறம் சிவா இயக்கத்துல நடிச்சிட்டிருக்கிற படம் ‘தலை 54’.

இப்ப நாம பார்க்கப் போறது ‘தலை 54’ படத்தைப் பற்றிய செய்தி.

விஜயா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜீத் குமார்  ஜோடியாக தமன்னா ஜோடியாக நடிக்கும் பெயரிடபடாத  படத்தின் படப்பிடிப்பு பெரும் பகுதி முடிவடைந்து விட்டது.

தயாரிப்பாளர்கள் வேங்கடரம ரெட்டி , பாரதி ரெட்டி ஆகியோர் இப்படத்தைப் பற்றி வெளியிட்ட பத்திரிகை குறிப்பில் இயக்குனர் சிவாவின் வேகமும் திட்டமிடுதலும் அஜீத் குமாரின் ஒத்துழைப்பும் இப்படத்தை நாங்கள் திட்டமிட்டதை போலவே  2014ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிட முடியும் என நம்பிக்கையுடன் உள்ளதாக குறிப்பிட்டனர்.

60%  படம் முடிவடைந்த நிலையில் சுவிட்சர் லேன்ட்  நாட்டின் பெரும் பகுதிகளில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் இரு  இனிமையான பாடல்கள் தினேஷ் மாஸ்டரின் நடனம் அமைப்பில் அஜீத் , தமன்னா  ஜோடியுடன் படமாக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாது  அஜீத் குமார் படப்பிடிப்பில்  தான் ஒரு பெரிய நடிகர் என்ற எண்ணம் இன்றி  எளிமையாக படப்பிடிப்பு குழுவினர்களோடு ஒருவராக பணிபுரிந்தது சக குழுவினரையும் உற்சாகமூட்டியது.

சந்தானம் , பாலா, விதார்த் , முனீஸ் , சுஹைல் , ‘நாடோடிகள்’ அபிநயா, மனோசித்ரா , ‘எதிர் நீச்சல்’  சுசா குமார்,  ரமேஷ் கண்ணா , இளவரசு , அப்பு குட்டி ,பிரதீப் ராவத் , கிரேன் மனோகர் , வித்யு லேகா ராமன் , தேவதர்ஷினி மற்றும் பலர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்த பிரம்மாண்ட படத்தின் ஒளிப்பதிவாளர் – வெற்றி , படத்தொகுப்பு – காசி விஸ்வநாதன் , சண்டைப் பயிற்சி – செல்வா , கலை மிலன் .

முழுக்க முழுக்க ஜனரஞ்சகமாக தயாரிக்கப்படும் இந்த படத்தில் அஜீத்தின் உடை அமைப்பும்  , பாத்திர அமைப்பும் ரசிகர்களை கவர்வதுடன் அவர்களுக்கு பொங்கல் விருந்தாகவும் அமையும் எனக்  கூறுகிறார்கள் தயாரிப்பாளர்கள் .

Read Previous

ஷங்கரின் ‘ஐ’ 75 சதவீதம் முடிந்தது…

Read Next

ரஜினிகாந்த் பாராட்டிய ‘ஓம்’