ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ஏஆர். ரகுமான் இசையமைப்பில், விக்ரம், எமி ஜாக்சன், சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் ‘ஐ’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 75 சதவீதம் முடிந்துள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார்.
விக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறாராம். மிக மிக ஒல்லியான தேகம், சராசரியான உடலமைப்பு, பின்னர் கட்டு மஸ்தான உடல் என படத்தின் கதாபாத்திரத்திற்கேற்ப அவ்வப்போது அவருடைய உடலமைப்பை மாற்றி வருகிறாராம். ஷங்கர், விக்ரமின் இந்த ஈடுபாட்டை மிகவும் பாராட்டியிருக்கிறார்.
விக்ரமின் ஜோடியாக நடிக்கும் எமி ஜாக்சனி உடை, நடிப்பு என அவரையும் வெகுவாக மாற்றியிருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
இந்த படத்திற்கான ஒவ்வொரு அங்குல உழைப்பும் மதிப்பு மிக்கது என்கிறார் இயக்குனர் ஷங்கர்.
தமிழ் சினிமாவை மீண்டும் உலகம் முழுக்க பேச வையுங்கள்…
