1. Home
  2. News

Category: News

பத்திரிகையாளர் ராஜு முருகன் இயக்கும் ‘குக்கூ’

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம், தி நெக்ஸ்ட் பிக் பிலிம் கம்பெனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் படம் ‘குக்கூ’. இயக்குனர் லிங்குசாமியிடம் ‘பீமா, பையா’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், பத்திரிகையாளருமான ராஜு முருகன் இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இப்படத்தின் நாயகனாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறார்.…

இளையராஜாவால் இசையமைப்பாளர் ஆனேன் – கே. பாக்யராஜ்

அமெரிக்காவில் வசிக்கும் திருமதி கார்த்திகா மகாதேவ் இசையமைத்த ‘விலகுது திரை’ என்ற திரை தமிழிசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா சென்னை ஆர்.கே.வி திரையரங்கில் நடந்தது. ஆல்பத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களையும் எழுதியதுடன், அவற்றுக்கான பாடல் காட்சியையும் இயக்கியிருக்கிறார் முருகன் மந்திரம். முதல் குறுந்தகட்டை  கே.பாக்யராஜ் வெளியிட, இசையமைப்பாளர் பரத்வாஜ்,…

ஆர்யா எனக்கு நல்ல நண்பர் – நயன்தாரா

‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தமிழ்த் திரையுலகில் சிறந்த ஜோடிகளுள் ஒன்றாக கருதப்பட்டு வரும் ஜோடி ஆர்யா – நயன்தாரா ஜோடி. தற்போது ‘ராஜா ராணி’ படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். சமீப காலமாக மீடியாக்களில் இருவம் காதலிக்கிறார்கள் என்று செய்திகள் வெளிவந்தபடி உள்ளன.…

இளையராஜா காப்பி அடித்தார் – கங்கை அமரன் பேச்சு

இராம. நாராயணன் இயக்கத்தில் ‘ஆர்யா சூர்யா’ என்ற படத்தில் நடிகராகம் அறிமுமாகிறார் கங்கை அமரன். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது பத்திரிகையாளர்களுக்கு ஏதாவது எழுதுவதற்குத் தீனி கொடுக்க வேண்டும் என்று சொல்லி விட்டுப் பேசிய கங்கை அமரன், இளையராஜாவும் காப்பி அடித்திருக்கிறார் என்று பேசி அவர்…

‘சிங்கம்’ சிங்கிளாத்தான் வரும்…

சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா, சந்தானம் மற்றும் பலர் நடிப்பில், ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள ‘சிங்கம் 2’ படம் மட்டுமே இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் ஏறக்குறைய 2400 திரையரங்குகளில் வெளியாகியுள்ள இப்படம், சென்னையில் மட்டும் 27 தியேட்டர்களிலும், புறநகர்ப் பகுதிகளில் 27 தியேட்டர்களிலும் வெளியாகியுள்ளது.…

இராம.நாராயணனின் ‘ஆர்யா சூர்யா’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் இராம.நாராயணன் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘ஆர்யா சூர்யா’. இராம. நாராயணன் இயக்கத்தில் உருவாகும் 126வது படம் இது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்ற கனவோடு நண்பர்கள் இருவர் சென்னைக்கு வருகின்றனர். முன்னேற துடித்த அந்த இரு இளைஞர்களின் வாழ்வில் அரசியலும் சினிமாவும் குறுக்கிடுகிறது.…

உதயநிதி நடிக்கும் புதிய படம்…

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என்ற மாபெரும் வெற்றிப் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ரெட் ஜெயன்ட் மூவீஸ் உதயநிதி ஸ்டாலின். இப்போது எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ என்ற படத்தில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார். இந்த படத்தையடுத்து இயக்குனர் ராஜேஷிடம் உதவியாளராக…

மூத்த பி.ஆர்.ஓ.க்களுக்கு நிதி உதவி…

தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் சார்பாக 7 மூத்த உறுப்பினர்களுக்கு மாதம் தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் யூனியன் , பொதுக்குழு கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அப்போது முன்னாள் தலைவர் விஜயமுரளி மற்றும் சில உறுப்பினர்கள் மூத்த…

லிங்குசாமி படத்தில் சூர்யா…

லிங்குசாமி இயக்கப் போகும் புதிய படத்தில் அடுத்த மாதம் முதல் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானதாக இதற்கு முன்னர் வெளிவந்த தகவல்கள் அனைத்திலும் உண்மையில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. ‘துருவ…

15 கோடி ரூபாய் படத்தில் ஜெய்…

கிளவுட் நைன் மூவீஸ் தயாநிதி அழகிரி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் வெங்கட் இயக்கத்தில் ஜெய் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் 15 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட உள்ளது. இதுவரை ஜெய் நடித்த படங்களிலேயே அதிகபட்ச செலவு செய்து தயாரிக்கப் போகும் படம் இது என்பதால்…