அஜித் பட டைட்டில் “ஆரம்பம்” – அதிகாரபூர்வ அறிவிப்பு

ajith-53-stills_00003

அப்பாடா….ஒரு வழியா அஜித் படத்தோட டைட்டில் அறிவிச்சிட்டாங்க…படத்தோட பேரு “ஆரம்பம்”.

எதிர்பார்ப்பு உச்சத்தில் இருந்தது…யூகத்தின் அடிப்படையில் பல பெயர்கள் பரிசீலிக்க பட்டது . ஒவ்வொரு அசைவும் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது .

இது வரை எந்த ஒரு படத்துக்கும் ‘தலைப்பு ‘ குறித்து இப்படி ஒரு விவாதமோ எதிர்பார்ப்போ இருந்ததில்லை .

ஸ்ரீ சத்ய சாய் மூவீஸ் சார்பில் A.ரகுராமன் தயாரிப்பில் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத் குமாரின் நடிப்பில் வெளிவர உள்ள படத்துக்கு ‘ஆரம்பம்’ என  பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அஜீத் குமார்  சுய விளம்பரம் செய்யும் வகையில்  வரும் தலைப்பையோ , சுய புகழ் பாடும் தலைப்பையோ வைக்க கூடாது என்று தயாரிப்பாளரிடமும், இயக்குனரிடமும்  கோரிக்கை வைக்க , கதையின் கருவுக்கு ஏற்றவாறு இப்போது ‘ஆரம்பம்’ என பெயரிடப் பட்டுள்ளது.

ஆஹா…அவரோட ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான டைட்டில்தான்….

அஜித்தின் ஆட்டம் ஆரம்பம்…

Read Previous

சிகப்பான பெண்களைத்தான் ஹீரோக்களுக்கு பிடிக்கிறது – தன்ஷிகா

Read Next

‘வணக்கம் சென்னை’ – 5 பாடல்கள் பாடியுள்ள அனிருத்