ஹன்சிகாவைப் பிடிக்கிற ஊர்ல தன்ஷிகாவைப் பிடிக்காமப் போயிடுமா என்ன ?
ஜெயம் ரவி நடித்த ‘பேராண்மை’ படத்தில் அறிமுகமாகி, ‘மாஞ்சா வேலு’, தொடர்ந்து ‘அரவான்’, ‘பரதேசி’ ஆகிய படங்களின் மூலம் தன்னை திரும்பிப் பார்க்க வைத்தவர் தன்ஷிகா.
சமீபத்திய பத்திரிகைப் பேட்டி ஒன்றில், “ஹீரோக்களுக்கு சிகப்பான பெண்களைத்தான் பிடிக்கிறது,” என்று கூறியிருக்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, “நம்ம தமிழ் மக்களுக்கு சிகப்பா இருக்கிறவங்கன்னாலே ஒரு ஈர்ப்பு இருக்கும். ஆனா, இப்ப நிலைமை கொஞ்சம் கொஞ்சமா மாறி வருது. மாநிறமான பெண்களை புறக்கணிக்காம இருக்காங்க. இருந்தாலும் வட நாட்டுப் பெண்கள்னாலே வரவேற்பு அதிகமாத்தான் இருக்கு.
நமக்கு எப்படி சிகப்பா இருக்கிறவங்களை கண்டால் பிடிக்குதோ அதே மாதிரிதான் நம்ம ஹீரோக்களுக்கும் சிகப்பா இருக்கிறவங்கள பிடிக்குது. அவங்களும் தமிழங்கதான, ” என்று கூறியிருக்கிறார்.
ஆனால் , எங்களுக்குளாம் அப்படியில்ல தன்ஷிகா. மாளவிகா பாடினால் மாதிரி, “கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு…”.
நீங்க ஒரு பழமொழி கேள்விப்பட்டிருக்க மாட்டீங்க போல. “கருப்புக்கு அழகு பண்ணி கண்ணால பாரு, சிகப்புக்கு அழகு பண்ணி…………..அடி”ன்னு சொல்வாங்க…
கோடிட்ட இடத்தை பழமொழி தெரிஞ்ச யார்கிட்டயாவது கேட்டு தெரிஞ்சுக்குங்க…