தனுஷ், ஹிந்தியில் முதல் முறையாக ஹீரோவாக நடித்து வெளிவந்த ‘ராஞ்சனா’ ஹிந்தித் திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, பாலிவுட் வட்டாரத்தில் பெருமையாகப் பேசப்படும் ‘100 கோடி கிளப்’பில் இணைந்தது.
தனுஷ், சோனம் கபூர் நடித்து ஆனந்த் எல் ராய் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் உருவான ‘ராஞ்சனா’ திரைப்படம் ஜுன் 21ம் தேதியன்று ஹிந்தியிலும், தமிழில் ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் ஜு 28ம் தேதியன்றும் வெளியானது.
படம் வெளியான முதல் வாரத்திலேயே 30 கோடிக்கும் மேலாக வசூலித்து படம் சூப்பர் ஹிட் என பாலிவுட் வட்டாரத்தில் அறிவிக்கப்பட்டது.
வெளியான முதல் நாளன்றே 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது.
படத் தயாரிப்பு, மற்றும் விளம்பரங்களுக்கு மட்டும் 35 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறார்கள். அந்த தொகையை இந்த படம் முதல் வாரத்திலேயே வசூலித்துக் கொடுத்து விட்டது. அதன் பின் வசூலாகும் ஒவ்வொரு காசும் படத்தின் லாபம் மட்டுமே.
ஆகஸ்ட் 2ம் தேதி இப்படம் ஆன்லைன் மூலமும் வெளியாகிறது. அதன் மூலமும் இப்படத்தை லட்சக்கணக்கானோர் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அது மட்டுமல்லாமல் படத்தின் தொலைக்காட்சி உரிமை மூலமும் பல கோடி ரூபாய் கிடைக்கும்.
இன்று இந்த படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் மும்பையில் நடைபெறுகிறது.
மொத்தத்தில் தனுஷ் இந்த படத்தின் மூலம் அகில இந்திய ஸ்டார் ஆகி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
