டூ வீலரில் பயணிக்கும் இயக்குனர்…

karu-palaniappanஒரு படம் ஓடினாலே, அடுத்த படத்துல அட்வான்ஸ் வாங்கி எந்த காரை புக் பண்ணலாம்னு நினைக்கிறவங்கதான் அதிகம்.

சினிமாவையும், பந்தாவையும் பிரிக்க முடியாது. முன்னாடிலாம் கார் வச்சிருக்கிறதே ஒரு பந்தாவா இருந்தது. இப்ப எந்த மாதிரி கார் வச்சிருக்காங்கன்றதுதான் பந்தாவே.

‘ஆடி’ கார், ‘ஹம்மர்’ கார், ‘பென்ஸ்’ கார் இப்படி கோடி ரூபாய் கொடுத்து கார் வாங்கி சுத்தி வர்றவங்கதான் அதிகம். இது சினிமாவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் பொருந்தும்.

ரோடுல போகும் போது நாமே பார்க்கலாம், பல சமயங்கள்ல கார்ல ஒருத்தர் மட்டுமே பயணிப்பாங்க. இப்படி ஒருத்தர் மட்டுமே கார்ல போறதுக்கு பதிலா, டூ வீலர்ல போனால் எரிபொருளும் மிச்சம், டிராபிக்கும் குறையும்.

இதை உணர்ந்த சினிமா இயக்குனர் கரு. பழனியப்பன், கார்ல இருந்து  டூ வீலருக்கு மாறிட்டாராம். இப்பலாம் அவர் எங்க போனாலும் அவரோட புல்லட்லதான் போறாராம்.

இப்படி ‘ஜன்னல் ஓரம்’னு பஸ்ஸை வச்சி படம் எடுக்கிறதால , பொது போக்குவரத்தோ முக்கியத்துவம் உணர்ந்து, இப்படி மாறிட்டாரான்னு தெரியலை…

எப்படியோ, கார்ல போனால் மரியாதை இல்லை, கிரியேட்டிவிட்டிக்குதான் மரியாதைன்னு நீங்களாவது நிரூபிக்கிறீங்களே, சார்…வாழ்த்துகள்…

Read Previous

தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்…

Read Next

ஷாரூக் கான் – சல்மான் கான் திடீர் சந்திப்பு