தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன்…

shrutihassanஸ்ருதிஹாசன், தெலுங்கிலும், ஹிந்தியிலும் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறார்.

கடந்த மாதம் ஸ்ருதிஹசான் நடித்து தெலுங்கில் வெளியான தெலுங்கு படமான ‘பலுப்பு’ சூப்பர் ஹிட்டாக ஓடுகிறது. ஹிந்தியில் கடந்த வாரம் வெளியான ‘டி டே’, மற்றும் ‘ராமய்யா ஒஸ்தாவையா’ படங்களும் வெற்றிப் பட வரிசையில் சேர்ந்து விட்டதாம்.

இரு மொழிகளிலும் ஸ்ருதி ஹாசன் பக்கம் வெற்றிக் காற்று வீசுவதால் அவரை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்களாம்.

தமிழில் விஜயகாந்த் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற ‘ரமணா’ திரைப்படம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நடிக்க ரீமேக்காக உள்ளது. இப்படத்தில் அக்ஷய் ஜோடியக நடிக்க முதலில் தமன்னாவை தேர்வு செய்திருந்தார்களாம்.

ஆனால், தற்போது, தமன்னாவுக்கு பதில் ஸ்ருதிஹாசன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம். அக்ஷய் ஜோடியாக தமன்னா ஏற்கெனவே நடித்து விட்டதால், அவருக்கு ஜோடியாக புதிதாக ஒருவரை போட வேண்டும் என்பதால்தான் இந்த முடிவு என்கிறார்கள்.

தமன்னா நடித்து எந்த ஹிந்திப் படமும் இன்னும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியோ, ஸ்ருதிஹாசன் காட்டில் நல்ல மழைதான்…

Read Previous

‘மரியான்’ டப்பிங் பிரச்சனை…

Read Next

டூ வீலரில் பயணிக்கும் இயக்குனர்…

Most Popular