ஹிந்தி திரையுலகில் இரு பெரும் நட்சத்திரங்கள் ஷாரூக் கான், சல்மான் கான்.
ஆனால், இருவருக்குமிடையே நீண்ட காலமாக ஒரு பனிப் போர் நிலவி வருவது உண்மை.
2008ம் ஆண்டு நடிகை காத்ரினா கைஃப் பிறந்த நாள் விருந்தில் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டனர். அதன் பின் நடந்த பல விருது வழங்கும் விழாக்களில் கூட இருவரும் சந்தித்துக் கொள்வதோ, பேசிக் கொள்வதோ கிடையாது.
இந்த நிலையில் மகாராஷ்டிர காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பாபா சித்திக் வழங்கிய ‘இஃப்தார்’ விருந்தில் ஷாரூக்கும், சல்மானும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்டனர்.
மேலும், இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி, நலம் விசாரித்துக் கொண்டனர்.
இது அங்கு வந்திருந்த பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது பற்றி ட்விட்டரில் ஷாரூக் கூறியதாவது, “ புத்தகத்தின் அடுத்த பக்கத்தை திருப்புவதை விட வாழ்க்கையில் மகிழ்ச்சியான விஷயம் எதுவுமில்லை. அதே பக்கத்தில் தடுமாறிக் கொண்டிருப்பதை விட, அந்த பக்கத்திற்குப் பிறகு நிறைய இருக்கிறது,” என்று ட்வீட் செய்துள்ளார்.
