‘பிரியாணி’ செப்டம்பர் 6 ரிலீஸ்…

biriyani-posterகார்த்தி, ஹன்சிகா, வெங்கட் பிரபு மற்றும் பலர் நடிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் ‘பிரியாணி’ திரைப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

யுவன்ஷங்கர் ராஜாவின் இசையில் 100வது படமாக வரும் இந்த படத்தின் இசையயை அநேகமாக ஏ.ஆர். ரகுமான் வெளியிடலாம் என சொல்கிறார்கள். யுவனின் 100வது படம் என்பதால் ஏ.ஆர். ரகுமான் வர சம்மதித்துள்ளதாகவும் தெரிகிறது.

ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்கு மேல் இசை வெளியீடு இருக்கும் எனத் தெரிகிறது.

இந்த படத்தில் ராம்கி, மான்டி தக்கார், சாம் ஆண்டர்சன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவரும் 5வது படம் இது.

Read Previous

உதவி இயக்குனர்களுக்கு மாதச்சம்பளம் – இயக்குனர்கள் சங்கம்

Read Next

இயக்குனர் பேரரசுக்கு தடை…