விஷால், ஐஸ்வர்யா அர்ஜுன் நடிக்கும் ‘பட்டத்து யானை’ படத்தில் சந்தானம் முதன் முறையாக இரு வேடங்களில் நடிக்கிறார்.
இதுநாள் வரை இதை ரகசியமாக வைத்திருந்தனர். நேற்றுதான் முறையாக அறிவித்துள்ளனர். ஒரு சந்தானம் இருந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. இரு சந்தானம் வேறு, கேட்கவா வேண்டும்.
படத்தைப் பார்த்ததும் மகிழ்ச்சியடைந்த படத்தின் நாயகன் விஷால், சென்னை ஏரியா வெளியீட்டையும், தெலுங்கில் வெளியிடும் உரிமையையும் வாங்கிவிட்டார்.
தெலுங்கில் இப்படம் ‘தீரடு’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
உலகம் முழுவதும் வரும் 26ம் தேதி வெளியாகும் இப்படத்திற்காக 850 பிரின்ட்டுகள் போடப்பட்டுள்ளன.
நிச்சயம் இந்த படம் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்கிறார் படத்தின் இயக்குனர் பூபதி பாண்டியன்.