ஹீரோவாக போட்ட இயக்குனரை வெறுப்பேற்றிய சிவகார்த்திகேயன்

manam-kothi-paravaiஒரு நடிகருக்கோ, இயக்குனருக்கோ முதல் படம் என்பது கூட பெரிதல்ல. அவர்களின் இரண்டாவது படம்தான் அவர்களுடைய தலையெழுத்தை நிர்ணயிக்கும் படமாக அமையும்.

அப்படி தன்னை ஹீரோவாக  ‘மனம் கொத்திப் பறவை’ படத்தில் நடிக்க வைத்த இயக்குனர் எழிலை மேடையில் வைத்தே வெறுப்பேற்றியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

சமீபத்தில நடந்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இசை வெளியீட்டில்தான் இந்த வருத்தத்துக்குரிய சம்பவம் நடைபெற்றது.

சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து படங்களை இயக்கிய பாண்டிராஜ், எழில், துரை. செந்தில் குமார், ஆகியோர் அதே மேடையில் இருக்கும் போது எழில் இயக்கிய படத்தைப் பற்றி மட்டும் அவர் பேசியது தேவையற்ற ஒன்று என்றே நமக்குத் தோன்றுகிறது.

விஜய், அஜித், ஜெயம் ரவி, சரத்குமார், பிரபுதேவா போன்ற ஹீரோக்களை வைத்து படம் இயக்கிய இயக்குனர் எழிலுக்கு அப்போது எப்படி இருந்திருக்கும் .

அந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசும் போது அனைவரைப் பற்றியும் பேசிக் கொண்டு வந்த போது இயக்குனர் எழிலைப் பற்றி சொன்னது இதுதான்.

“எழில் சாரோட மனம் கொத்திப் பறவை படம் பத்தி நான் எங்கயுமே பேச மாட்டேன்கிற வருத்தம் அவருக்கு எப்பவும் உண்டு.  அதுக்கு காரணம் என்னன்னா, நான் அந்த படத்துல அவ்வளவு நல்லா நடிச்சிருக்கனான்னு எனக்கு டவுட்டு எப்பவும் உண்டு. இப்ப மட்டும் நான் நல்லா பண்றனான்னு கேக்காதீங்க, ” என்றார்.

அவரின் இந்த பேச்சு மேடையில் அமர்ந்திருந்த இயக்குனர் எழிலுக்கு கொஞ்சம் அதிர்ச்சியைத் தந்தது உண்மை.

அந்த நிகழ்ச்சியில் இருந்த நமக்கும் அது அதிர்ச்சியாக இருந்தது. சரி, ‘மனம் கொத்திப் பறவை’  படத்தைப் பற்றி சிவகார்த்திகேயன் அப்போது என்ன பேசியிருக்கிறார் என யு டியூபில் தேடிப் பார்தோம்.

ஒரு இணையதள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, “இந்த படம் பயங்கர கலாட்டாவா இருக்கும். எழில் சார் எடுத்த படங்கள் எல்லாமே அழகா இருக்கும். அப்படித்தான் இந்த படத்தை எடுத்திருக்காரு. அவர் இதுவரைக்கும் நிறைய லவ், கொஞ்சம் காமெடி சொல்லியிருப்பாரு. இந்த படத்துல கொஞ்சம் க்யூட்டான லவ், நிறைய காமெடி பண்ணியிருக்காரு, ” என்று கூறியிருக்கிறார்.

படம் வெற்றிகரமாக ஓடிய பிறகும் அப்போது ஒரு பேச்சு, இப்போது ஒரு பேச்சு ஏன் எனத் தெரியவில்லை.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து முதன் முதலாக 100 நாட்கள் ஓடிய படம் ‘மனம் கொத்திப் பறவை’ மட்டுமே.

பல மேடைகளில் நிகழ்ச்சி நடத்திய சிவகார்த்திகேயனுக்கு மேடை நாகரிகம் என்றால் என்ன என்று தெரியாதா ?

அதுவும், அந்த படத்தின் இயக்குனரை மேடையில் வைத்துக் கொண்டே சிவகார்த்திகேயன் இப்படி பேசியிருப்பது அவரைப் போன்ற வளரும் நடிகர்களுக்கு சரியாக இருக்காது.

பதவி வரும் போது மட்டும் பணிவு வரவேண்டும் என்பதில்லை, வெற்றி வரும் போதும் பணிவு வரவேண்டும்…

Read Previous

ரஜினிகாந்த் பாராட்டிய ‘ஓம்’

Read Next

‘பட்டத்து யானை’ – சந்தானம் ‘டபுள் ஆக்‌ஷன்’