சிவா, வசுந்தரா மற்றும் பலர் நடிக்க யதீஷ் மகாதேவ் இசையமைப்பில் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கியிருக்கும் ‘சொன்னா புரியாது’ இம்மாதம் 26ம் தேதி வெளியாக உள்ளது.
இப்படத்தின் இயக்குனர் கிருஷ்ணன் ஜெயராஜ் ‘தமிழ்ப் படம்’ இயக்குனர் சி.எஸ். அமுதனிடம் (உங்க ‘ரெண்டாவது படம்’ எப்பதான் வரும் ) உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
‘தில்லு முல்லு’ படத்தைத் தொடர்ந்து சிவா நடித்து வெளிவரும் படம். ‘தென் மேற்கு பருவக்காற்று’ படத்திற்குப் பிறகு வசுந்தரா ஹீரோயினாக நடித்திருக்கும் படம்.
படத்தின் டிரைலருக்கு ஏற்கெனவே ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து இந்த படத்தைப் பற்றி பேச வைத்து விட்டது.
இந்த படத்தை ஶ்ரீ தேனாண்டாள் பிக்சர்ஸ் வெளியிடுகிறது.