ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாரா

nayantharaஜெயம் ரவி தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில்,   கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ‘பூலோகம்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த படங்களுக்குப் பிறகு மீண்டும் அவரது அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். ‘தில்லாலங்கடி’ படத்திற்கப் பிறகு அண்ணன் தம்பி இருவரும் இணைந்து பணியாற்றவில்லை.

இந்த படத்தின் பூஜை சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இந்த படத்தைத் தயாரிக்கிறார்கள்.

இந்த படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்க நயன்தாராவை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது.

‘சந்தோஷ் சுப்ரமணியம்’ படத்திலேயே ஜெயம் ரவி ஜோடியாக நயன்தாராதான் நடிக்க வேண்டியிருந்ததாம். அப்போது நடக்காமல் போனது இப்போது நடக்கிறது.

சிறு இடைவெளிக்குப் பிறகு நயன்தாரா இப்போது மிகவும் பிஸியாகி விட்டார். தற்போது அவர், அஜித்துடன் பெயரிடப்படாத படம், ஆர்யாவுடன் ‘ராஜா ராணி’, கஹானி ரீமேக்கான ‘அனாமிகா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியுடன் நயன்தாரா ஜோடி சேர்ந்தாலும், ‘ஜெயம்’ அண்ணன் – தம்பி ஜோடி சேர்ந்தாலே அது ஜெயம்தான்…

Read Previous

‘சொன்னா புரியாது’ – 26 ரிலீஸ்…

Read Next

வாலிபக் கவிஞன் வாலி…