1. Home
  2. News

Category: News

‘மங்காத்தா’வில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்…

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடித்த மாபெரும் வெற்றிப்படமான ‘மங்காத்தா’வில் விஜய் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். சமீபத்திய டிவி பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட வெங்கட் பிரபு , அஜித் – விஜய், தனுஷ் – சிம்பு, கூட்டணியை வைத்து படங்களை இயக்கும் ஆசை உள்ளது என்று சொன்னார்.…

அஜித், விஜய்க்கு போட்டியாக ‘ஜாக்கி சான்’…

அஜித் நடிக்கும் ‘வீரம்’, விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ ஆகிய படங்கள் பொங்கலுக்கு வெளி வர உள்ளன. இந்த படங்களுடன் ‘கோச்சடையான்’ முதலில் வெளியாகும் என்றார்கள். அதன் பின் அப்படம் இந்த போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. இப்போது உலக சூப்பர்ஸ்டார் ‘ஜாக்கி சான்’ நடித்துள்ள ‘போலீஸ் ஸ்டோரி 2013’ படம்…

‘தூம் – 3’ – மூன்றே நாளில் 170 கோடி வசூல்…

யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரிப்பில் விஜய் கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் ஆமீர் கான், அபிஷேக் பச்சன், உதய் சோப்ரா, காத்ரீனா கைப் மற்றும் பலர் நடித்து கடந்த 20ம் தேதி உலகெங்கும் வெளியான ஹிந்தித் திரைப்படம் ‘தூம் 3’. இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. மற்ற…

‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’ – வட சென்னை கதை…

குருந்துடையார் புரொடக்ஷன்ஸ் சார்பாக நிர்மல் தேவதாஸ் தயாரிக்க ஆர். விஜயகுமார் இயக்கும் படம் ‘நாங்கெல்லாம் ஏடாகூடம்’. இப்படத்தில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்களே. தயாரிப்பாளரின் தம்பி மனோஜ் தேவதாஸ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக பார்வதி சுரேஷ் அறிமுகமாகிறார். மற்றும் விசாகர், ஹென்சா, ராஜேஷ், ஜார்ஜ் விஜய், பாலாஜி, ஜெப்ரி, சியானோ…

‘இரண்டாம் உலகம்’ – விலகியது ஏன் ? – ஹாரிஸ் ஜெயராஜ் விளக்கம்…

செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா, அனுஷ்கா நடிக்க மிகவும் பிரம்மாண்டமாகத் தயாராகி , இரண்டே நாட்களில் தியேட்டர்களை விட்டு தூக்கப்பட்ட படம் ‘இரண்டாம் உலகம்’. இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் ஆனவர் ஹாரிஸ் ஜெயராஜ். பாடல்களுக்கு மட்டும் ஹாரிஸ் இசையமைத்தார்.  பாடல்களையும் கூட சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக வெளியிட்டார்கள். ஆனால், என்ன…

மருத்துவமனையில் இளையராஜா…

மருத்துவமனையில் இளையராஜா…

இன்று காலை ஏற்பட்ட லேசான நெஞ்சு வலி  காரணமாக இளையராஜா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் , அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடந்து வருவதாகவும், லேசான நெஞ்சு வலிதான் என்றும் தெரிவித்துள்ளனர். ஐசியு-வில் இருந்தாலும் அவர் நார்மலாகவே உள்ளார். உடல்நிலையைக் கவனித்த பிறகு…

‘பாவாடை-தாவணி’யில் சன்னி லியோன்…

சன்னி லியோன்…என்று சொன்னால் இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாமல் இருக்காது. ‘வடகறி’ படத்தில் ஜெய்யுடன் இணைந்து பாங்காங்கில் , குத்தாட்டம் போட்டு வருகிறார் சன்னி லியோன். சன்னி லியோனின் தீவிர ரசிகரான ஜெய்யின் கனவுப் பாடலாக இப்பாடல் வருகிறதாம். இப்பாடலுக்காக சன்னி லியோன் பாவாடை, தாவணியிலும், ஜெய் வேட்டி சட்டையிலும்…

‘கொல வெறி’ பாடி சலிச்சி போச்சி – தனுஷ்

தனுஷுக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும் ஒரே நாளில் உலகப் புகழ் தேடிக் கொடுத்த பாடல் ‘3’ படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொல வெறி’ பாடல். இப்பாடல் வீடியோ வெளிவந்து இரண்டு ஆண்டுகள் ஆனாலும் ரசிகர்கள் இன்னும் மறக்காமலே இருக்கிறார்கள். இதுவரை இப்பாடல் 7,53,84,530 ஹிட்களை யூ டியூப்பில்…

இளையராஜா இசையைத்தான் ‘காப்பி’ அடிக்கிறேன் – பிரேம்ஜி

வெங்கட் பிரபுவின் தயவால் நடிகராகவும் அனைத்து ஹீரோக்களுடன் வலம் வந்து கொண்டிருப்பவர் அவருடைய தம்பி பிரேம்ஜி. சமீபத்தில் வெளிவந்த ‘பிரியாணி’ படத்தில் கூட கார்த்தியின் நண்பராக நடித்திருந்தாலும் படம் முழுவதும் இவர் வரும்படி முக்கியத்துவம் கொடுத்திருந்தார் வெங்கட் பிரபு. நடிகராக மட்டுமல்லாமல் ‘என்னமோ நடக்குது, மாங்கா’ படங்களுக்கும் பிரேம்ஜி…

ரஜினி பாராட்டினால் படம் ஓடி விடுமா ?

ஓடாத படத்தை ஓட வைப்பதற்குத்தான் எப்படியெல்லாமோ விளம்பரப்படுத்த வேண்டியிருக்கிறது. ஒரு படம் நல்ல படம் என்றால் அந்த படம் ‘மவுத் டாக்’ என்று சொல்லக்கூடிய வாய் வழி பேச்சினாலேயே நன்றாக ஓடி விடும் என்று அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் சொல்வார்கள். வெகு நாட்களாக இல்லாத ஒரு வழக்கத்தை இப்போது…