ஜீவா உளறல் – விஜய் ரசிகர்கள் கடும் கோபம்…

jeeva 0414நடிகர் ஜீவா அவரது பிறந்த நாளை முன்னிட்டு இரு நாட்களுக்கு முன் விழா ஒன்றை நடத்தினார்.

அந்த விழாவில் பேசிய ஜீவா, ‘‘ஜில்லா’ படத்தை திருட்டு விசிடியில் பாருங்கள்” என்று பேசியிருந்தார். அவரது இந்த உளறல் பேச்சு விஜய் ரசிகர்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

விரைவில் வெளிவரும் ‘ஜில்லா’ படத்தை விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். அதிலும் அஜித் நடித்துள்ள ‘வீரம்’ படமும் அதே நாளில் வெளிவருவதால் ‘ஜில்லா’ படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்ற முனைப்பில் காத்திருக்கின்றனர்.

ஏற்கெனவே, சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது. இருவரது ரசிகர்களும் ‘கமென்ட்கள்’ மூலம் சண்டை போடாத குறையாக ‘ஸ்டேட்டஸ்’ போட்டு வருகின்றனர்.

‘வீரம்’ படத்தின் அதிரடியான டிரைலர் வேறு பல்வேறு இணையதளங்களில் அதிக ஹிட்களை அள்ளிக் குவித்து வரும் நிலையில் ‘ஜில்லா’ படத்தின் டிரைலர் இன்னும் வெளிவராமல் உள்ளது அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

இருப்பினும் ‘ஜில்லா’ டிரைலர் நாளை கண்டிப்பாக வெளியிடப்படும் என்ற அறிவிப்பு விஜய் ரசிகர்களை ஆறுதலடைய வைத்தது.

அதே சமயம், ‘ஜில்லா’ படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும், நடிகருமான ஜீவாவின் பேச்சு விஜய் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அவர்கள் பல்வேறு விதத்தில் கமென்ட் போட்டு வருகிறார்கள்.

சூப்பர் குட் நிறுவனம் பெருமை மிக்க நிறுவனம், இந்த படத்தில் ஜீவாவும் தயாரிப்பாளராக உள்ளதால், பொறுப்புடன் அவர் பேசியிருக்க வேண்டாமா, அப்படியில்லை என்றால் எழுதி வைத்தாவது பேசியிருக்கலாமே என்ற அவர்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

விஜய் இது பற்றி ஏதாவது கேட்டால், “நான் உளறலை உளறலைண்ணா…” என பாட்டாவே படிச்சிடுங்க…

Read Previous

தெலுங்கு ஹீரோ உதய் கிரண் தற்கொலை…

Read Next

அதிரடி நிகழ்ச்சிகளுடன் ஆரம்பமான ‘அதிரடி’…