ஹரிஹரன் ராம் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்து கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ‘அன்புடன் மகி’.
லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
‘ஜோ’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஹரிஹரன் ராம் இப்படத்தை இயக்குகிறார். இதில் ஜி.வி. பிரகாஷ் குமார் கிரிக்கெட் வீரராக மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் கிரிக்கெட் பயிற்சிகளையும் மேற்கொண்டுள்ளார். மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார்.
மேலும், பிரேம்குமார், சபரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, ஹரி முனியப்பன், கார்த்திக் ராமதுரை, தனுஷ், ராகேஷ், காவ்யா அறிவுமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘கர்ணன்’, ‘வாழை’ படங்களின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். சக்தி பிரணேஷ் படத்தொகுப்பையும், மீவின் வினோத் கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.
லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது தயாரிப்பாக உருவாகும் இப்படம், அந்நிறுவனத்தின் முந்தைய தயாரிப்புகளான ‘கருடன்’, ‘மாமன்’ படங்களைத் தொடர்ந்து வெளியாகவுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டருடன், கதையின் தன்மை மற்றும் படத்தின் உருவாக்கம் குறித்த விவரங்களை உள்ளடக்கிய லுக் புக்கையும் படக்குழு வெளியிட்டுள்ளது.