மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ் – டிசம்பர் 4 வெளியீடு

அஹம்மது கபீர் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் உருவாகியுள்ள ‘மெனி மெனி ஹேப்பி ரிட்டர்ன்ஸ்’ (Many Many Happy Returns) திரைப்படம் வரும் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் மூலம் அறிவித்துள்ளது.

காதல், நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை மையமாகக் கொண்டு ரொமாண்டிக் காமெடி பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. வாழ்க்கையில் கடந்து சென்றதாக நினைக்கும் சில உறவுகளும், முடிவடையாத சில அத்தியாயங்களும் தொடர்ந்து நினைவுகளில் பயணிப்பதை நகைச்சுவை மற்றும் உணர்வுகளுடன் இப்படம் பதிவு செய்கிறது.

காளிதாஸ் ஜெயராம், லட்சுமி ஜோதிஷ், லால், பொப்பன் அலுமூடன், சஞ்சு சானிச்சென், சோசம்மா, ரெஞ்சித் சேகர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அஹம்மது கபீர் மற்றும் ஹசன் ரஷீத் இணைந்து தயாரித்துள்ளனர். கதையை அஹம்மது கபீர் எழுதியுள்ள நிலையில், ஜாபின் ஜான் மற்றும் அஹம்மது கபீர் இணைந்து திரைக்கதை அமைத்துள்ளனர்.

ஜிதின் ஸ்டானிஸ்லாஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு மகேஷ் புவனேந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். விஷ்ணு கோவிந்த் ஒலிப்பதிவுப் பணியையும், மஷார் ஹம்சா ஆடை வடிவமைப்பையும், ரோனெக்ஸ் சேவியர் ஒப்பனைப் பணியையும் மேற்கொண்டுள்ளனர். அனு விஸ்வநாதன் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.

‘ஜூன்’, ‘மதுரம்’ ஆகிய திரைப்படங்களை இயக்கிய அஹம்மது கபீர், ‘கேரளா கிரைம் ஃபைல்ஸ்’ இணையத் தொடரின் இரண்டு பாகங்களையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ராகுல் வெளியிடுகிறார்.

Read Previous

சங்கராபரணம் – மீண்டும் வெளியீடு