கண்ணன் இயக்கத்தில் விமல், பிரியா ஆனந்த் நடிக்கும் படத்திற்கு இரு தலைப்புகளை பதிவு செய்திருக்கிறார் அப்படத்தின் தயாரிப்பாளர் குளோபல் இன்ஃபோடைன்மென்ட் மைக்கேல் ராயப்பன்.
‘சர்க்கரை, காதல் கொஞ்சம் கம்மி’ என இரு தலைப்புக்களை இப்படத்திற்காக பதிவு செய்திருக்கிறார்கள்.
இதில் ஒன்றைத் தேர்வு செய்து விரைவில் அறிவிக்க இருக்கிறார்கள்.
‘சேட்டை’ படத்திற்குப் பிறகு கண்ணன் இயக்கும் இந்த படத்தின் கதை தூத்துக்குடியிலிருந்து சென்னைவரை வரும் ரயிலில் நடைபெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு பயணக் காதல் கதை.
கண்ணன் இயக்கிய முதல் படமான பரத், தமன்னா நடித்த ‘கண்டேன் காதலை’ படமும் ஒரு பயணக் காதல் கதைதான்.
மீண்டும் அம்மாதிரியான ஒரு வெற்றியைக் கொடுப்பதற்காகத்தான் இப்படி ஒரு கதையை உருவாக்கியிருக்கிறார் கண்ணன் என சொல்வதற்கு நிறைய வாய்ப்புண்டு.
‘காதல் கொஞ்சம் கம்மி’யா இருந்தாலும் ‘சர்க்கரை’ மாதிரி இனிப்பான ஒரு படத்தைக் கொடுங்க கண்ணன்.