‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் , விரைவில் ‘நண்பேன்டா’ என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளார்.
அவர் தற்போது ‘சுந்தரபாண்டியன்’ இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
இதற்கடுத்து ‘நண்பேன்டா’ படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். இப்படத்தை புதுமுக இயக்குனர் ஜெகதீஷ் இயக்குகிறா. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சந்தானமும் கண்டிப்பாக படத்தில் இருக்கிறார்.
பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது.