மக்கள் காவலன் – இரண்டாவது சிங்கிள் வெளியீடு

பிர்லா ஸ்டுடியோஸ் மற்றும் பா. ரஞ்சித், அதிதி ஆனந்த் ஆகியோரின் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ‘மக்கள் காவலன்’. சந்தோஷ்குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். கே. மணிகண்டன் நாயகனாக நடிக்க, திவ்யா ஸ்ரீ பாதா நாயகியாக அறிமுகமாகிறார்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘இற இறகாக’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலைப் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஜோதி கண்ணா எழுதியுள்ள இப்பாடலை நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துப் பாடியுள்ளார்.

கடினமான சூழலில் வாழும் நாயகன், காதலியின் அன்பின் மூலம் காதலின் மீதான நம்பிக்கையைப் பெறுவதை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாகியுள்ளது. நாயகனின் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையில் காதல் ஏற்படுத்தும் மாற்றத்தைப் பாடல் வரிகளும் இசையும் வெளிப்படுத்துகின்றன.

முன்னதாக இப்படத்தின் முதல் பாடலான ‘இக்னோர்’ வெளியாகி கவனம் பெற்றது. தற்போது இரண்டாவது பாடலாக ‘இற இறகாக’ வெளியாகியுள்ளது.

காவல் துறையில் பணியாற்றும் ஒருவர், ஊழல் நிறைந்த அமைப்பை எதிர்த்து நிற்கும்போது எதிர்கொள்ளும் போராட்டங்களையும், அதன் மூலம் அவர் மக்களின் பாதுகாவலனாக மாறும் சூழலையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

‘மக்கள் காவலன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 4ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Read Previous

ஓம் – டிரைலர்

Read Next

‘பார்க்கிங்’ தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த படம்