ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில் எஸ்.ஆர். பிரபாகரன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா, சந்தானம் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் தருவாயில் உள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மனம் கவர்ந்த இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ் ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் பாடல்கள் போலவே ஹிட்டாகும் விதத்தில் இந்த படத்திற்கும் பாடல்களைக்கொடுத்திருக்கிறாராம்.
இன்னும் சில நாட்களில் இப்படத்தின் ஆடியோ டீசர் வெளியிடப்பட உள்ளது. அதற்கடுத்த சில நாட்களில் படத்தின் இசை வெளியீடும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதத்தில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.