நடிகை ஸ்ரீப்ரியா இயக்கியுள்ள ‘மாலினி 22 பாளையம்கோட்டை’ திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.
இப்படம் மலையாளத்தில் பெரிய வெற்றி பெற்ற ‘ஃபிமேல் 22 கோட்டயம்’ படத்தின் ரீமேக்.
தனது அடுத்த படத்தையும் ரீமேக் படமாகத்தான் இயக்கவிருக்கிறார் ஸ்ரீப்ரியா.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்று பரபரப்பாக பேசப்பட்டு வரும் ‘த்ரிஷ்யம்’ படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய உள்ளார்.
இந்த படத்தில் நாயகனாக வெங்கடேஷ் நடிக்கவிருக்கிறார்.
விரைவில் இது பற்றிய மற்ற விவரங்கள் அறிவிக்கப்பட உள்ளன.
தமிழிலும் இந்த படத்தை ரீமேக் செய்தால் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று சூடான விவாதமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழில் இயக்கப் போவது யார், நடிக்கப் போவது யார் ? என்பது இன்னும் சஸ்பென்சாகவே இருக்கிறது.
யாருக்கு அந்த வாய்ப்பு ?…