எந்த ஹீரோவையோ, இல்லை ஹீரோயினையோ பத்தி ஒரு கிசுகிசு எழுதினால் அதுல முதல் இடம் பிடிக்கிறது ‘காதல்’தான்.
இவருக்கு அவங்களோட காதல், அவங்களுக்கு இவரோட காதல்னு எழுதித் தள்ளுவாங்க.
அதுலயும் ஒரு நடிகரும், நடிகையும் தொடர்ந்து ஜோடி சேர்ந்து நடிச்சாலே அவங்களுக்குள்ள காதல்னு எல்லாரும் எழுதறது வழக்கம்தான்.
‘பாண்டிய நாடு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஷால் – லட்சுமி மேனன் இடையே காதல் என பரவலாகப் பேசப்பட்டது. அடுத்தாகவும் இவர்களிருவம் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் ஜோடி சேர்ந்து நடிக்க அம்மாதிரியான பேச்சு எழுவதற்கும் காரணமாக அமைந்தது.
ஆனால், விஷால் தான் காதலில் தோல்வி அடைந்தவன் என சொல்லியிருக்கிறார். அவர் காதலித்த ஹீரோயினைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படி கூறியிருக்கிறார்.
“அந்த ஹீரோயின் கிட்ட எப்ப என்னோட காதலை சொன்னேனோ அப்பவே அது தோல்வி ஆகிடுச்சி. அவங்க என் காதலை ஏத்துக்கவே இல்லை. என்னை வேணான்னு சொல்லிட்டாங்கன்னு சொல்ல முடியாது. ஆனால், அப்படி நடக்கவே முடியாதுங்கறதுதான் உண்மையாகிடுச்சி. அவங்க யாருன்னுலாம் வேண்டாம். ரகசியமாவே இருந்துட்டுப் போகட்டும், ” என்று கூறியிருக்கிறார்.
விஷால் மனம் கவர்ந்த அந்த ஹீரோயின் யாராக இருக்கும்…?