ஒரு படத்தில் முதன் முறையாக ஜோடியாக நடித்து அந்த படம் வெற்றி பெற்று விட்டார், அடுத்தடுத்து அதே ஜோடி சேர்ந்து நடிப்பது வழக்கமான ஒன்றுதான்.
இந்த சென்டிமென்டில்தான் ‘பாண்டிய நாடு’ படத்திற்குப் பிறகு விஷால், லட்சுமி மேனன் மீண்டும் இணைந்திருக்கிறார்கள்.
அதே போல ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் வெற்றி ஜோடியான சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா மீண்டும் ஒரு புதிய படத்தின் மூலம் ஜோடி சேர்ந்து நடிக்கவிருக்கிறார்களாம்.
இந்த படத்தைத் தயாரிக்கப் போகிறவர் சிவகார்த்திகேயனின் ‘குரு’வான தனுஷ்.
‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகாவுடன் நடிப்பவருக்கு இந்த புதிய படத்திலும் தமன்னா, அமலா பால் ஆகியோரை நடிக்க வைக்கலாம் என்று இருந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்ட சம்பளம் இவர்களை மானை விடி வேகமாக ஓடி வர வைத்திருக்கிறது.
அதனால், 2013ம் ஆண்டின் ஹிட் கூட்டணியான சிவகார்த்திகேயன் – ஸ்ரீதிவ்யா ஆகியோரையே மீண்டும் ஜோடியாக்கினால் என்ன என்று யோசித்தார்களாம்.
இப்போது , அந்த ஜோடி 2014ம் ஆண்டிலும் வெற்றியைத் தொடரும் என்று நம்புகிறார்களாம்…
நம்பிக்கைதானே வாழ்க்கை, அதானே எல்லாம்…