1. Home
  2. News

Category: News

‘ஆஹா’வென வளரும் ‘ஹலோ’ கந்தசாமி…

‘வீரம்’ படத்தில் ஒரு கூலித் தொழிலாளியை சுருக்கு கயிற்றில் மாட்டி தொங்க விடுவார்களே, அந்த தொழிலாளியை நினைவிருக்கிறதா? அவர்தான் ‘ஹலோ’ கந்தசாமி. இதுவரை சுமார் பதினெட்டு படங்களில் நடித்திருக்கும் கந்தசாமி, இன்னும் கொஞ்ச நாளில் தமிழ்சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வரக்கூடிய நேரம் காலம் நெருங்கிக் கொண்டேயிருக்கிறது. ஏன்?…

யுவன் ஒலி, வைரமுத்து மொழி…

‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முறையாக இணைந்து பணிபுரிய இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இந்த புதிய கூட்டணியை சேர்த்து வைத்த பெருமை, இரு ‘சாமி’களுக்கு உண்டு என்று சிலாகிக்கிறார் வைரமுத்து. அந்த ‘சாமி’கள் படத்தின் தயாரிப்பாளர் லிங்குசாமி, இயக்குனர் சீனு…

மக்களுக்கான படத்தைத்தான் எடுத்திருக்கிறேன் – ‘அங்குசம்’ மனுக்கண்ணன்

மனுஸ்ரீ பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் மனுக் கண்ணன் இயக்கியுள்ள படம் ‘அங்குசம்’. RTI எனப்படும் தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய பின்னணியில் உருவான கதை இது. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் இயக்குநர் மனுக்கண்ணன் பேசும் போது- ” இன்று இந்த…

தயாரிப்பாளர் சங்கத்தை காணவில்லை – தயாரிப்பாளர் குற்றச்சாட்டு

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் சார்பில் துவார் ஜி.சந்திரசேகர் தயாரித்துள்ள படம் ‘பாக்கணும் போல இருக்கு’. எஸ்.பி..ராஜகுமார் இயக்கியுள்ளார். அருள் தேவ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இவ்விழாவில் பேசிய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “இங்கு சிறு முதலீட்டுப் படங்கள் வருவதுதான் சினிமாவின் வளர்ச்சி என்றார்கள்.…

‘புறம்போக்கு‘ – பூரிப்பில் கார்த்திகா…

‘கோ’ படத்தில் நடித்த கார்த்திகாவுக்கு அதன் பின் வெளிவந்த ‘அன்னக்கொடி’ கொஞ்சம் அட்ரஸ் இல்லாமல் செய்து விட்டது. தமிழில் நடிப்பதற்கு யாருமே அழைக்காத நிலையில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம் நடிக்க உருவாகி வரும் ‘புறம்போக்கு’ படத்தில் நடிக்க அழைத்ததுமே சம்மதித்து விட்டார். மூன்று நாயகர்கள்…

4வது வாரத்தில் ‘வீரம்’…

பொங்கலுக்கு வெளிவந்த ‘வீரம், ஜில்லா’ படங்களில் ‘வீரம்’ திரைப்படம்தான் ‘க்ளியர் வின்னர்’ ஆக முந்திக் கொண்டுள்ளது. இன்று ‘வீரம்’ திரைப்படம் 4வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. அதே சமயம் அதே நாளில் திரைக்கு வெளிவந்த ‘ஜில்லா’ திரைப்படம் நேற்றுடன் பல திரையரங்குகளிலிருந்து எடுக்கப்பட்டு விட்டது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற…

யார் யாரோ விமர்சனம் எழுதுறாங்க – ஒரு ஒளிப்பதிவாளரின் எரிச்சல்…

எந்த திரைப்பட விழாவாக இருந்தாலும், யாராவது பரபரப்பாகப் பேசினால் அதை பத்திரிகைகளிலும், இணைதளங்களிலும் கண்டிப்பா செய்தியாக போடுவார்கள் என்ற எண்ணத்தில் பரபரப்பு என்று நினைத்து எதையாவது பேசுபவர்கள் பலர் இருக்கிறார்கள். சமீப காலமாக, படங்களைப் பற்றி சமூக வலைத்தளங்களில் வரும் விமர்சனங்களைப் பற்றி பலரும் பேசி வருகிறார்கள். அறிவியல்…

காதலும் ‘தொட்டால் தொடரும்’…

எப்.சி.எஸ். கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் துவார் ஜி. சந்திரசேகர்  தயாரிப்பில் கேபிள் சங்கர் இயக்கியுள்ள படம் ‘தொட்டால் தொடரும்.‘ தமன், அருந்ததி, வின்சென்ட் அசோகன், அம்மு,  ரஞ்சன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கேபிள் சங்கர், “ இது…

வெற்றிக்குக் காரணம் அஜித் சார் – பரதன்

சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘வீரம்.’ ஒரு கதாபாத்திரம் பேசும் வசனங்கள் ரசிகர்களால் பரபரப்பாக பேசப்படும் மிகச் சில படங்களின் வரிசையில் சமீபத்திய வரவு இது. அளவான , அழகான, ஆழமான சிந்திக்கத் தூண்டும் மற்றும் சிரிக்க வைக்கும் வசனங்கள் அரங்கத்தில் அதிகப்பட்டியான கைதட்டலைப்  பெறுகிறது.…

டேனியல் பாலாஜி இயக்கும் ‘குறோணி’…

“காக்க காக்க, காதல் கொண்டேன், பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு” போன்ற படங்களில் நடித்தவரும் தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும்  ‘வை ராஜா வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவருமான டேனியல் பாலாஜி இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளார். விரைவில் வெளிவர இருக்கும் ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்தைத் தயாரித்த…