ரஜினிகாந்தை இயக்க வேண்டும் – சேகர் கம்முலா

nee engae en anbae press meet_00012

ரஜினிகாந்தை இயக்க எந்த இயக்குனருக்குத்தான் ஆசை இருக்காது. ஆனால், அவரை அணுக முடியாமல் தவிக்கிறார் ஒரு இயக்குனர்.

அவர் தற்போது நயன்தாரா நடிக்கும் ‘நீ எங்கே என் அன்பே’ படத்தை இயக்கியுள்ள சேகர் கம்முலா.

ஏற்கெனவே, ஒரு புத்தக வெளியீட்டில் அவர் ரஜினிகாந்தைப் பற்றிப் பேசியதை சில மாதங்களுக்கு முன் செய்தியாக வெளியிட்டிருந்தோம். (அந்த செய்தியை படிக்க…)

நேற்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடந்த போது, அந்த செய்தியை மனதில் வைத்துக் கொண்டு, ரஜினியை இயக்க வேண்டும் என்ற உங்கள் ஆசை என்ன ஆனது என்ற கேள்வியை வைத்தோம்.

அதற்கு பதிலளித்த சேகர் கம்முலா,

“யாருக்குத்தான் அவரை இயக்கும் ஆசை இருக்காது. ‘லீடர்’ படத்தை தெலுங்கில் இயக்கிய உடனே அந்த படத்தின் தயாரிப்பாளரான ஏவிஎம்.சரவணன் சாரிடம் சொல்லி ரஜினிகாந்த் அவர்களுக்கு படத்தை போட்டுக் காட்டச் சொன்னேன். அவரும் காட்டினார்.

ஆனால், படம் பார்த்து விட்டு அவர் என்ன சொன்னார் என்பது இதுவரை எனக்குத் தெரியாது.

“லீடர்” படத்தின் ரீமேக்கில் ரஜினிகாந்த் நடித்தால், அவரால் அரசியலில் கண்டிப்பாக ஒரு பெரிய மாற்றமே நடக்கும். அந்த அளவிற்கு அந்த படம் அவராலும் பேசப்படும் படமாக அமையும்.

அவரைத் தொடர்பு கொள்ள முயன்றேன், முடியவில்லை. அவர் அந்த படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்,” என்ற ஆசையை அனைத்து பத்திரிகையாளர்கள் முன் வெளிப்படையாகத் தெரிவித்தார்.

இது ரஜினிகாந்த் காதுக்கு எட்டுமா என்பது தெரியாது. ஒரு வேளை அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர், அரசியல் சார்ந்த படத்திலும் நடிக்க வேண்டாமென்று நினைக்கிறாரோ என்னமோ…

புதுப் புது இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தார், நிச்சயம் வேறு ஒரு ரஜினிகாந்தை திரைப்படங்களில் நம்மால் பார்க்க முடியும்.

ஆசைப்படும் ஒரு இயக்குனரின் ஆசையை நிறைவேற்றுவாரா ரஜினிகாந்த் ?

Read Previous

கமல் ஜோடியாக மீண்டும் சிம்ரன் ?

Read Next

தமிழில் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்…