கிரிக்கெட்டில் விஷாலுக்கு அடி…பதறிய வரலட்சுமி…

ccl 4 news

சிசிஎல் மேட்ச்சில் சென்னை ரைனோஸ் அணி ஒரு வெற்றியை மற்றுமே பெற்று அரை இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

நேற்று ராஞ்சியில் நடைபெற்ற போட்டியில் போஜ்புரி தபாங்ஸ் அணியுடன் சென்னை ரைனோஸ் அணி தோல்வியடைந்ததால் அரை இறுதி போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

முதலில் சென்னை அணியைச் சேர்ந்த விஷ்ணு சிறப்பாக ஆடினாலும் தொடர்ந்து யாரும் சரியாக விளையாடாதலால் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

முன்னதாக சென்னை அணி பௌலிங் செய்த போது, விஷால் வீசிய ஓவர் ஒன்றில் எதிர் அணியின் பேட்ஸ் மேன் ஓங்கி அடித்த போது, அந்த பந்து விஷால் வயிற்றை பதம் பார்த்தது. அப்படியே சுருண்டு விழுந்தார் விஷால்.

இதை அணியின் ‘டக் அவுட்’டில் உட்கார்ந்த பார்த்துக் கொண்டிருந்த நடிகை வரலட்சுமி பதறிப் போனார். அவர் கண்ணோரம் கண்ணீர் வேறு எட்டிப் பார்த்தது.

இருந்தாலும் சில நிமிடங்களில் விஷால் , வலியையும் பொறுத்துக் கொண்டு தொடர்ந்து பந்து வீச ஆரம்பித்தார்.

சென்னை அணியின் சிசில் பங்களிப்பு இந்த ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. அரை இறுதியில் கேரளா ஸ்டிரைக்கர்ஸ், கர்நாடகா புல்டோசர்ஸ், போஜ்புரி தபாங்ஸ், மும்பை ஹீரோஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

வரும் சனிக்கிழமையன்று அரை இறுதிப் போட்டிகள், ஹைதராபாத்தில நடைபெற உள்ளன.

Read Previous

மலையாள ரசிகர்கள்தான் சிறந்தவர்கள் – த்ரிஷாவின் திடீர் மலையாள பாசம்

Read Next

அடுத்த படம்…அசத்தல் ‘லுக்’கில் தயாராகும் அஜித்…

Most Popular