நயன்தாரா எனது தோழி – சிம்பு

idhu namma aalu_00002

‘இது நம்ம ஆளு’ படத்தில் சிம்புவும், நயன்தாராவும் நீண்ட இடைவெளிக்குப் பின் சேர்ந்து நடிப்பதால் யாருக்கு லாபமோ இல்லையோ, படத் தயாரிப்பாளருக்குத்தான் அதிக லாபம்.

பைசா செலவில்லாமல் படத்திற்கு இப்போதே எக்கச்சக்கமான பப்ளிசிட்டி…

நயன்தாரா மீண்டும் ‘ஹிட்’ நடிகையாகி விட்டதால், அவரது வெற்றி ராசியும் இந்த படத்திற்கும் சேர்ந்து விடும்.

இருந்தாலும், மீண்டும் சிம்புவுடன் ஜோடி சேர்ந்து நடிப்பது பல பேச்சுக்களை கிளப்பினாலும், நயன்தாரா எனது தோழி என்கிறார் சிம்பு.

சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில் இது பற்றி சிம்பு கூறியிருப்பதாவது,

“டைரக்டர் பாண்டிராஜ்தான், ‘இது நம்ம ஆளு’ படத்துல நயன்தாராவை ஹீரோயினா நடிக்க வைக்க முடிவெடுத்தாரு. அவர் அப்படி சொன்னதுமே, எனக்கு ரசிகர்கள் ரசிப்பாளங்களா, வீட்டுல என்ன சொல்வாங்கன்னுதான் யோசனையா இருந்துச்சி.

முதல் இரண்டு நாள், ஷுட்டிங் ஸ்பாட்ல கூட எங்களையே பார்த்துட்டு இருந்தாங்க. அப்புறம் சரியாகிடுச்சி.

ஹன்சிகாவுக்கும் எனக்குமா காதல்ல நயன்தாராவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை. நயன்தாரா எனக்கு ஒரு தோழி. ஹன்சிகா என் காதலி, ” என சொல்லியிருக்கிறார்.

Read Previous

பாலு மகேந்திரா – ‘மறுபடியும்’ வாருங்கள்…

Read Next

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

Most Popular