பாலுமகேந்திரா உடலை பார்க்க அனுமதிக்கவில்லை – மௌனிகா

mounika-balumahendra

இயக்குனர் பாலுமகேந்திராவால் ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் நாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் மெளனிகா.

தொடர்ந்து ஒரு சில படங்களிலும், தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். அதன் பின் இயக்குனர் பாலுமகேந்திராவை திருமணம் செய்து கொண்டார்.

பாலுமகேந்திராவிற்கு அகிலா என்ற மனைவி உள்ளனார். அதன் பின் நடிகை ஷோபாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மூன்றாவதாக நடிகை மௌனிகாவை திருமணம் செய்து கொண்டார்.

பாலுமகேந்திராவின் மரணம் பற்றி தகவல் அறிந்ததும் அவரது உடலைப் பார்க்க மருத்துவமனைக்குச் சென்ற மௌனிகாவை சிலர் அனுமதிக்கவில்லை.

இது பற்றி பத்திரிகைப் பேட்டி ஒன்றில் மௌனிகா கூறியிருப்பதாவது,

“டைரக்டர் பாலுமகேந்திரா என் கணவர். 1985ம் ஆண்டு முதல் அவர் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார். 14 வருடங்களுக்கு முன் 2000ம் ஆண்டில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

அன்று முதல் கணவன் – மனைவியாக வாழ்ந்து வந்தோம். அவர் இறந்த தகவல் அறிந்ததும் மருத்துவமனைக்கு ஓடினேன். ஆனால், அவர் உடலைப் பார்க்க என்னை சிலர் அனுமதிக்கவில்லை.

பொதுவாக எல்லா 2வது மனைவிகளுக்கும் நடக்கும் கொடுமைதான் இது என்றாலும், என்னால் இந்த கொடுமையை ஜீரணிக்க முடியவில்லை, ” என்றார்.

பாலுமகேந்திராவே மனம் விரும்பி மௌனிகாவைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்த போதும், இப்படி கடைசியாக அவரது உடலைப் பார்க்கக் கூட மௌனிகாவிற்கு அனுமதி மறுப்பது சரியா ?

இந்த 2014ம் ஆண்டிலும் இப்படிப்பட்ட விஷயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

Read Previous

இன்றைய ரிலீஸ் – 3 படங்கள்

Read Next

இது கதிர்வேலன் காதல் – விமர்சனம்