1. Home
  2. News

Category: News

மணிரத்னத்தின் ‘ஓகே கண்மணி’ ஏப்ரல் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓகே  கண்மணி’. ‘கடல்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்தப் படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத இயக்குனர் மணிரத்னம் திடீரென இந்தப் படத்தை ஆரம்பித்தார்.…

யுஎஸ் பாக்ஸ் ஆபீஸ் – ‘என்னை அறிந்தால்’ சாதனை…

அஜித், அருண் விஜய், அனுஷ்கா, த்ரிஷா மற்றும் பலரது நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் யுஎஸ் பாக்ஸ் ஆபீஸில் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அங்கு இப்படம் 5,00,919 யுஎஸ் டாலர்களை வசூலித்து முந்தைய அஜித் படங்களின் சாதனையை முறியடித்திருக்கிறது. அது மட்டுமல்ல…

‘சூப்பர் கேர்ள்’ கெஸான்ட்ரா…

கல்லூரி மாணவர்களின் இசை வாழ்க்கையை மையாமாகக் கொண்டு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வானவில் வாழ்க்கை’. நடிப்பவர்களே பாடியும், பாடல்களுக்கு இசையை வாசித்தும் வெளிவரும் இந்த மியுசிக்கல் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகம் ஆகிறார் கெஸான்ட்ரா. பாடகி, நடிகை என தனது கலைப் பயணத்தை தொடங்கியிருக்கும்…

மாபெரும் தோல்விப் படமானது ‘ஷமிதாப்’…

அமிதாப் பச்சன், இயக்குனர் பால்கி இருவரும் இணைந்த முதல் இரண்டு படங்களான ‘சீனி கம், பா’ ஆகிய படங்கள் வசூல் படங்களாகவும், விமர்சன ரீதியாக சிறந்த படங்களாகவும் விளங்கின. ஆனால், இவர்களது கூட்டணியில் மூன்றாவது படமாக வெளிவந்த ‘ஷமிதாப்’ படம்  மாபெரும் தோல்விப் படமாகி விட்டது என பாலிவுட்டிலிருந்து…

தமிழில் ‘மூணே மூணு வார்த்தை’ தெரிந்த நடிகை…

எஸ்.பி. சரண் தயாரிப்பில் மதுமிதா இயக்கத்தில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘மூணே மூணு வார்த்தை’. டெல்லியைச் சேர்ந்த அதிதி செங்கப்பா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, ‘ர’ படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ‘மூணே மூணு வார்த்தை’ படத்தில்…

‘இவனுக்கு தண்ணில கண்டம்’ டீசருக்கு நல்ல வரவேற்பு

எஸ்.என்.சக்திவேல் இயக்கத்தில் ஏ 7 இசைக்குழு இசையமைக்க தீபக், நேகா, பாண்டியராஜன், சுப்பு பஞ்சு, மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர், சென்ட்ராயன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், சண்டி மற்றும் பலர் நடித்துள்ள ‘இவனுக்கு தண்ணில கண்டம்’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் கட்டிங்’ சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. சமீப காலமாக தனது நகைச்சுவை நடிப்பால்…

விஜய் டிவி – சூப்பர் சிங்கர் ஜுனியர் 4 – இறுதிப் போட்டி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் சிங்கர் ஜுனியர் 4’ நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி வரும் 20ம் தேதியன்று சென்னையில் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டியில் ஸ்பூர்த்தி, ஹரிப்பிரியா, ஜெஸ்ஸிகா, ஸ்ரீஷா, அனுஷ்யா, பரத் ஆகிய ஐவரும் போட்டியிட உள்ளார்கள். இவர்களில் ஒருவர் வெற்றியாளராக தேர்வாக உள்ளார். 2006ம்…

‘100வது நாள்’ – தமிழ் சினிமாவுக்கு வரும் ‘ரீ பூட்’ முறை…

மணிவண்ணன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் விஜயகாந்த், மோகன், நளினி, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 1984ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் ‘நூறாவது நாள்’. பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லரான இந்தப் படம் 80களில் அதிகம் பேசப்பட்ட ஒரு படமாக இருந்தது. சத்யராஜின் வில்லத்தனமான நடிப்பு அவருடைய திரையுலக…

கவுண்டமணி சாரை மிஞ்ச ஆளே இல்லை – பாண்டியராஜன் மகன் பிரித்வி

இயக்குநர் பாண்டியராஜனின் மகன் பிரித்வி ‘கை வந்த கலை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தற்போது முதல் முறையாக ஒரு முக்கியமான கேரக்டர் ரோலில் ‘வாய்மை’ படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் பற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.…

நான் செய்த அபத்தங்கள் – வசந்தபாலனின் வெளிப்படையான பதிவு

இயக்குனர் வசந்தபாலன், தமிழ் சினிமா உலகில் சிறந்த படைப்பாளிகளில் ஒருவராகப் பார்க்கப்படுபவர். எந்த ஒரு விஷயத்தையும் வெளிப்படையாகப் பேசுவதிலும், செய்வதிலும் ரசிகர்களிடத்திலும் நல்ல பெயரைப் பெற்றுள்ளவர். சிறந்த படங்களையே கொடுக்க நினைக்கும் இவரைப் போன்ற இயக்குனர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தரும் பரிசு தோல்வியாக இருந்தாலும் அதைக் கண்டு வருந்தாமல்…