தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் ‘ருத்ரமாதேவி’…

anushka rudhramadeviதெலுங்குப் பட உலகில் வெற்றிப் பட இயக்குனராக வலம் வரும் குணசேகர் மாபெரும் பொருட் செலவில் இயக்கி வரும் படம் ‘ருத்ரமாதேவி’.

13ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் அண்டை நாடுகளில் ஆணாதிக்கம் அதிகமிருந்த காலத்தில் 40 வருடங்களாக தன்னிகரில்லா அரசியாக தன்னுடைய நாட்டை ஆண்டு வந்த ‘ருத்ரமாதேவி’யின் கதையைத்தான் படமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

‘ருத்ரமாதேவி’யாக அனுஷ்கா நடித்திருக்கிறார். ‘அருந்ததி’ படத்தில் அருந்ததியாக வாழ்ந்து காட்டிய அனுஷ்கா இந்தப் படத்தில் வீறு கொண்ட வீர மங்கையாக அமர்க்களமாக நடித்திருக்கிறார்.

அல்லு அர்ஜுன், ராணா டகுபதி, பிரகாஷ்ராஜ், நித்யா மேனன், சுமன், விஜயகுமார், கேத்தரின் தெரேசா, ஹம்ச நந்தினி, அதிதி செங்கப்பா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒரிசாவில் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை நடிகர்கள் பங்கு கொண்ட போர்கக்களக் காட்சிள் பிரம்மாண்டமாகப் படமாக்கப்பட்டன.

அரண்மனை, தர்பார் மண்டபம், பிரம்மாண்டமான கோவில், மாபெரும் கடை வீதி, குளம் என பதினாறுக்கும் மேற்பட்ட பிரம்மாண்டமான அரங்கங்களை இந்தப் படத்திற்காக தோட்டா தரணி அமைத்துக் கொடுத்துள்ளார்.

முழுக்க முழுக்க ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களின் ஈடுபாட்டோடு ‘3 டி’யில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்காக பல கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றியிருக்கிறார்கள்.

சென்னையில் உள்ள என்ஏசி தங்க மாளிகையில் ஐந்து கோடி ரூபாய் செலவில் ‘ருத்ரமாதேவி’க்காக தங்க ஆபரணங்கள் கலை நுணுக்கத்தோடு உருவாக்கப்பட்டு படத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் இந்த நகைகள் விற்பனைக்கும் வர உள்ளது.

இளையராஜா இசையைமப்பில் பா.விஜய் வசனம், பாடல்களை எழுதியுள்ளார். கலையை தோட்டா தரணியும், சண்டைப் பயிற்சியை பீட்டர் ஹெய்ன், நான்கு முறை தேசிய விருது பெற்ற நீட்டா லுல்லா உடையலங்காரம், நடனப் பயிற்சியை ராஜு சுந்தரம், பிருந்தா ஆகியோரும், ஒளிப்பதிவை அஜயன் வின்சென்ட், படத் தொகுப்பை ஸ்ரீகர் பிரசாத்தும் செய்கின்றனர்.

குணசேகர் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ள இப்படத்தை என். ராமசாமி தமது ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் தமிழில் திரையிட உள்ளார். இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.

Read Previous

கௌதம் – சிம்பு கூட்டணியின் ‘அச்சம் என்பது மடமையடா’…

Read Next

‘பாஃப்டா’ திரைப்படக் கல்லூரி – ஓர் அறிமுகம்