‘என்னை அறிந்தால்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் கௌதம் மேனன், சிம்பு நடிக்க ஆரம்பமாகி இடையில் நிறுத்தப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவக்கினார்.
‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் மீண்டும் இணையும் இந்த படத்தின் மீது படம் ஆரம்பமான போதே எதிர்பாப்பும் மிக அதிகமாக இருந்தது. தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அறிவித்து உள்ளார்.
‘அச்சம் என்பது மடமையடா’ என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ற தலைப்பு என அவர் கூறினார்.
ஏற்கெனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில், ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் மீண்டும் துவங்க உள்ளது.