‘சகாப்தம்’ – ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ்…

sagaptham tamil movie previewவிஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமாகும் ‘சகாப்தம்’ படம் ஏப்ரல் 2ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை சுரேந்திரன் இயக்க கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். கதாநாயகிகளாக நேகா ஹிங், சுப்ரா ஐயப்பா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு அனைவரும் பார்த்து ரசிக்கும்படியான ‘யு’ சர்டிபிகேட் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 2ம் தேதி ‘உத்தம வில்லன், நண்பேன்டா,’ ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. அந்தப் படங்களுடன் தற்போது ‘சகாப்தம்’ படமும் மோத உள்ளது.

Read Previous

‘பாஃப்டா’ திரைப்படக் கல்லூரி – ஓர் அறிமுகம்

Read Next

6 இயக்குனர்கள், 6 கதைகள், ஒரே படம்…