6 இயக்குனர்கள், 6 கதைகள், ஒரே படம்…

bench talkies first bench“பீட்சா மற்றும் ஜிகர்தண்டா” திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும் அவரது நண்பர்கள் சிந்தனையில் உருவாகி அந்தப் புதுமையான சிந்தனைக்குக் கொடுத்த வடிவம்தான் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்.

சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித் திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்ற தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்குத் துணைக் கரம் நீட்டும் நிறுவனமாக பொழுது போக்குத் துறையில் தடம் பதிக்க மலர்ந்துள்ளது இந்த நிறுவனம்.

குறும் படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அணுகக் கூடிய, அங்கீகாரம் பெறுத் தரக்கூடிய மற்றும் வருமானம் ஈட்டக் கூடிய வாய்ப்புகளை உருவாக்கி குறும் படங்களை திரையரங்குகள், தொலைக்காட்சிகள்,விமான பொழுதுபோக்கு ஊடகங்கள், வானொலி மற்றும் டிஜிட்டல் அரங்குகளில் வெளியிட வினியோகிக்கும் ஒரு துணை நிறுவனமாக பென்ச் பிலிக்ஃஸ் இயங்குகிறது.

ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ் -தி ஃபஸ்ட் பென்ச்’ என்பது ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள இந்தக் குறும்படங்கள் மார்ச் 6, 2015 ஆம் தேதி கோயம்புத்தூர் நகரில் SPI சினிமாஸ் மற்றும் PVR சினிமாஸ் திரை அரங்குகளிலும், பெங்களூரு PVR சினிமாஸில் மார்ச் 13, 2015 ஆம் தேதியிலும் வெளியிடப்படுகின்றன.

கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் பென்ச் டாக்கீஸ் நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. குறும்பட இயக்குனர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.

பென்ச் டாக்கீஸ் இயக்குனர்களாக அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர்.எம் மற்றும் கார்திக் சுப்பாராஜ் செயல்படுகின்றனர்.

Read Previous

‘சகாப்தம்’ – ஏப்ரல் 2ம் தேதி ரிலீஸ்…

Read Next

‘சவாலே சமாளி’ – டிவி-யைச் சுற்றி ஒரு சினிமா…