அனிருத் பாடிய ‘டண்டனக்கா…’ பாடல்…

Romeo Juliet - Anirudh Song_00010மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்பில் லட்சுமண் இயக்கத்தில் ஜெயம் ரவி, ஹன்சிகா மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘ரோமியோ ஜுலியட்’.

இப்படத்திற்காக இமான் இசையில் அனிருத் பாடிய ‘டண்டணக்கா…’ என்ற பாடல் ஒன்று சமீபத்தில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

அந்தப் பாடல் பற்றி இயக்குனல் லட்சுமண் கூறியதாவது,

“அனேகன்’ படத்தில் சூப்பர்ஹிட் ஆன ‘டங்கா மாரி ஊதாரி’ பாடலை எழுதிய ரோகேஷ் எழுத, இமான் இசையில் அனிருத் பாடிய,

டண்டனக்கா

எங்க தல எங்க தல டீ ஆரு

சென்டிமென்ட்டுல தாறு மாறு

மைதிலி என்னை காதலின்னாரு

அவரு உண்மையா

லவ் பண்ண சொன்னாரு

மச்சான் – அங்க தான்டா

எங்க தல நின்னாரு…. என்ற கானா பாடல் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.

இன்றைய இளைஞர்களின் செல்லப் பாடலாக இது அமோக வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. ‘ரோமியோ ஜூலியட்’ பெரிய வெற்றிப் படமாக அமையும்,” என்கிறார் இயக்குனர் லஷ்மன்.

இந்த ‘டண்டனக்கா…’ சிங்கிள் டிராக் இரு தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது.

Read Previous

விரைவில் ‘ஓ காதல் கண்மணி’…

Read Next

என் மீதே சந்தேகம் இருந்தது – ஜி.வி.பிரகாஷ்குமார்