‘டார்லிங்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தற்போது, “பென்சில், த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.
நாயகனாக மாறிய பின் இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ஜிவி.
“நடிப்பிற்காக எனக்குள் இருக்கும் சிறு சிறு கூச்சங்களை விட நேர்ந்தது. அது ஒரு பெரிய சவாலாய் இருந்தது. தொடக்கம் முதலே ஒரு பயம் கலந்த சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. ‘டார்லிங்’ படம் மூலம் மக்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்றுக் கொண்டது மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. அடுத்து ‘பென்சில்’ வெளி வர தயாராக உள்ளது.
இப்போது கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பில் ‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’ படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இயக்குனர் ஆதிக் எதை எப்போது செய்வாரென்றே தெரியாது. அவர் இந்த படத்தின் டைட்டிலைச் சொல்லும் போதே எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
இப்படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் பேசப்படும், அனைவரையும் எளிதில் கவர்ந்துவிடும். கதைக்காகவும் , அதன் கதாப்பாத்திரங்களுக்காகவும் இந்தப் படம் நிச்சயம் பேசப்படும். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளமே மிகவும் உற்சாகமானது. அந்த உற்சாகம் படம் முழுக்க நிறைந்து இருக்கும்,” என ஜிவியும் உற்சாகமாகப் பேசுகிறார்.