1. Home
  2. News

Category: News

மார்ச் 1-ல் ‘உத்தம வில்லன்’ இசை விழா…

ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் ஜிப்ரான் இசையைமப்பில் கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜா குமார், கே.விஸ்வநாத், கே.பாலசந்தர் மற்றும் பலர் நடிக்கும் ‘உத்தம வில்லன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள உலக வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.…

பா.மீனாட்சி சுந்தரம் – புதிய பாடலாசிரியர்…

இயக்குனர் ஜெயம் ராஜா, காதல் மன்னன் மானு நடித்த ‘என்ன சத்தம் இந்த நேரம்’ திரைப்படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் பா.மீனாட்சிசுந்தரம். இவர் பாடலாசிரியர் பா.விஜய்யிடம் பத்தாண்டுகள் உதவியாளராக இருந்தவர். தற்போது, ‘ராட்டினம்’ திரைப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.தங்கசாமியின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ‘எட்டுத் திக்கும் மதயானை’ திரைப்படத்தில் ‘நெல்லைச்…

’ஓ காதல் கண்மணி’ ஆன ‘ஓகே கண்மணி’…

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கத் தயாராகி வந்த ‘ஓகே கண்மணி’ படம் ‘ஓ காதல் கண்மணி’ என பெயர் மாற்றப்பட்டுள்ளது. முதலில் காதலர் தினத்தன்று வெளியான படத்தின் முதல் பார்வையில் ‘ஓகே கண்மணி’ என்றுதான் பெயரைக் குறிப்பிட்டிருந்தார்கள்.…

‘த்ரிஷா இல்லன்னா நயன்தாரா’வில் சிம்ரன்…

இன்று நயன்தாரா, நேற்று த்ரிஷா, அதற்கு முன் சிம்ரன் என்றுதான் தமிழ் சினிமாவில் ஒரு ‘டிரெண்ட்’ இருக்கிறது. 90களில் தமிழ்த் திரையுலகில் நம்பர் 1 நடிகையாக இருந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா, பிரசாந்த், கமல்ஹாசன், சரத்குமார், விஜயகாந்த், அர்ஜுன் என பலருடனும் ஜோடியாக பல வெற்றிப் படங்களில்…

‘என்னை அறிந்தால்’ – 100 கோடி வசூல்…

‘என்னை அறிந்தால்’ படம் கடந்த 5ம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியானது. கடந்த 18 நாட்களில் இந்தப் படம் 100 கோடி ரூபாயைத் தாண்டியிருப்பதாக கோடம்பாக்க வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படம் வெளியான முதல் வாரத்தில் அபாரமான வசூலையும், அதன் பின் சராசரியான வசூலையும் பெற்ற இந்தப் படம்…

‘புலி’ ஆகஸ்ட் 15ல் ரிலீஸ்…?

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப், பிரபு மற்றும் பலர் நடிப்பில் பிரம்மாண்டமாகத் தயாராகி வரும் படம் ‘புலி’. கடந்த மூன்று மாதங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் வெளிநாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தப் படம் ஒரு…

1500 படங்களுக்கு இசையமைத்துள்ள சங்கர் – கணேஷ்

எம்.ஜி.ஆரால் 1969 ல் ‘நான் ஏன் பிறந்தேன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் இரட்டை இசையமைப்பாளர்களான சங்கர் கணேஷ். அதன் பின் “இதய வீணை, ஆட்டுக்கார அலமேலு, பசி, தாயில்லாமல் நானில்லை, சட்டம் ஒரு இருட்டறை, நீயா, டார்லிங் டார்லிங் டார்லிங், எங்க சின்ன ராசா” உட்பட ஏராளமான படங்களுக்கு…

செல்வராகவன் முதுகில் குத்திய 325 பேர்…

‘காதல் கொண்டேன்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன். தம்பி தனுஷ் நடிகராக தற்போது எங்கோ போய்விட்ட நிலையில், அண்ணன் செல்வராகவன் தனக்குக் கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார். “மயக்கம் என்ன, இரண்டாம் உலகம்’ ஆகிய படங்கள் அவரை நிறையவே சோதித்தாலும் தமிழ்…

‘எனக்குள் ஒருவன்’ – எதிர்பார்ப்பில் சித்தார்த்…

எந்த ஒரு ஹீரோவுமே வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபடும் போது அவர்கள் அதிக ஈடுபாட்டுடன் நடிக்கும் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பை வைப்பார்கள். மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த், ஷங்கர் இயக்கத்தில் 2003ம் ஆண்டு வெளிவந்த ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் ஐந்து நாயகர்களில் ஒருவராக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து…

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய்…?

‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் நிறைவடைந்து படம் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ளார். ‘புலி’…