இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ விருது…

125 வருடம் பாரம்பரியம் மிக்க மதுரைக் கல்லூரி (The Madura College, [Autonomous]) தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் சீனு ராமசாமிக்கு ‘மக்கள் இயக்குனர்’ என்ற கௌரவப் பட்டத்தை வழங்கியது. மதுரைக் கல்லூரி பண்பாட்டுக் கழகத்தின் சார்பாகவும் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. முரளி மற்றும் பேராசிரியர் முனைவர் ந.ரத்தினக்குமார், ஆகியோரால் பட்டயச் சான்றிதழும், விருதும் அளித்து கௌரவிக்கப்பட்டது.

சாதாரண மக்களின் வாழ்வியலை யதார்த்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் உண்மையாகவும் நேர்மையாகவும் தன்னுடைய திரைப்படங்களில் பதிவு செய்தவர் இயக்குனர் சீனு ராமசாமி.

“கூடல் நகர், தென் மேற்கு பருவக்காற்று, நீர்ப் பறவை, இடம் பொருள் ஏவல்” ஆகிய திரைப்படங்களை இயக்கி தமிழ்த் திரை உலகிற்கு மதிப்பு கூட்டி வருபவர் சீனு ராமசாமி.

விருதைப் பெற்றுக் கொண்டு ஏற்புரையில் நிகழ்ச்சிய இயக்குனர் சீனு ராமசாமி பேசியதாவது,

“வாழும் காலத்தில் பட்டப் பெயர்களை, அடைமொழிகளை உடுத்திக் கொண்டு வாழ்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு மனிதனின் மறைவிற்குப் பிறகு அவன் இந்த சமூகத்திற்கு பயன்பட்ட விதத்தில் மக்கள் தரும் பட்டப் பெயர்களே நிரந்தரமானவை. ஆயினும் மதிப்பு மிக்க மதுரைக் கல்லூரியின் கல்விக் குழுமம் வழங்கும் இவ்விருதினை ஏற்றுக் கொள்கிறேன். மேலும் இவ்விருதைப் பெறும் இந்த
சந்தர்ப்பத்தில் எனக்கு பொறுப்புணர்சியும் கூடுகிறது,” என்று அவர் பேசினார்.

இவ்விழாவில் 2000 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read Previous

Sagaptham – Trailer

Read Next

Idhu Namma Aalu – Official Teaser