‘எலி’யில் வடிவேலுவுடன் சதா…

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ‘தெனாலிராமன்’ படத்தின் மூலம் மீண்டும் படங்களில் நடிக்க வந்த போது கதாநாயகனாகவேதான் நடிக்க வந்தார் வடிவேலு. ஆனால், ‘தெனாலிராமன்’ என பெயரை வைத்து விட்டு நகைச்சுவையாக கலகலப்பாக பெயருக்கேற்றபடி நடிக்காமல் சீரியசான கதாபாத்திரத்தில் ஹீரோயிசமாக வடிவேலு நடித்ததை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் அந்தப் படம் தோல்வியடைந்தது.

மீண்டும் நாயகனாக நடித்து ஜெயித்துக் காட்டுகிறேன் பார் என முடிவெடுத்த வடிவேலு ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கிய யுவராஜையை இயக்குனராக போட்டு அடுத்து களமிறங்கிய படம்தான் ‘எலி’. ஆனால், இந்த முறை வெற்றி வலைக்குள் கண்டிப்பாக விழுந்தே ஆக வேண்டும் என்று எண்ணி ‘எலி’ படத்தை கலகலப்பாகவே உருவாக்கி வருகிறார்களாம்.

சில நாட்களுக்கு முன் ‘எலி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை சதா நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது. தொடர்ந்து படப்பிடிப்பிலும் கலந்து கொண்டு நடித்து வருகிறார். தற்போது வடிவேலு, சதா இருவரும் நடித்துள்ள ஒரு காட்சியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ படத்தில் வடிவேலுவுடன் ஸ்ரேயா ஆடியதையே பொறமையாகப் பார்த்தவர்கள், தற்போது வடிவேலுவுடன் சதா இருப்பதைப் பார்த்தால் ஆடிப் போய் விடுவார்கள் போலிருக்கிறது.

 

Read Previous

Komban – Karuppu Nerathazhagi – Song Video

Read Next

‘நான் கொஞ்சம் சென்சிட்டிவ்’ – யுவன் ஷங்கர் ராஜா

Most Popular