1. Home
  2. Author Blogs

Author: admin

admin

‘இரண்டாம் உலகம்’ இனிதே முடிந்தது…

செல்வராகவன் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆர்யா, அனுஷ்கா நடிக்கும் ‘இரண்டாம் உலகம்’ படத்தின் படப்பிடிப்பு இனிதே முடிவடைந்துள்ளது. தற்போது இப்படத்தின் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் வேலைகளை ஆரம்பித்து விட்டார் இயக்குனர். செல்வராகவன் முதன் முறையாக ஹாரிஸ், ஆர்யா, அனுஷ்கா ஆகியோருடன் இணைந்து பணியாற்றும் படம் என்பதாலும், எப்போதுமே செல்வராகவன்…

தனுஷைக் காக்க வைக்கும் நடிகை…

உலகப் புகழ் பெற்ற நம்ம தனுஷையே காக்க வைக்கிறாங்களா ஒருத்தர்னு தனுஷ் ரசிகர்கள் (?)  யாரும் கோபப்பட வேண்டாம். ‘களவாணி’ சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நசீம் நடிக்கும் படம் ‘நய்யாண்டி’. இந்த படத்தின் படப்பிடிப்பை ஹீரோயின் நஸ்ரியாவிற்காக சில நாட்கள் தள்ளி வைத்திருக்கிறார்கள். நஸ்ரியா நசீம் +2…

‘ஜில்லா’ ஆரம்பமான கதை…

விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் நடிக்க இமான் இசையமைப்பில் நேசன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜில்லா’. பொதுவாக, விஜய் சமீப காலங்களில் அதிகமாக அறிமுகமில்லாத இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில்லை. ஆனால், ‘ஜில்லா’ படத்தை அதிக பரிச்சயமில்லாத நேசன் இயக்குவதை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்தனர். நேசன் இதற்கு…

பெண் குழந்தை பாதுகாப்பு வைப்புத்தொகை ரூ.50 ஆயிரமாக அதிகரிப்பு – முதல்வர் அறிவிப்பு

சட்டசபையில்  கேள்வி நேரம் முடிந்ததும் பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா அறிக்கை ஒன்றை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘‘ஆணும், பெண்ணும் நிகரெனக்கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தழைக்குமாம்’’ என்ற மகாகவி பாரதியாரின் வாக்கிற்கிணங்க, பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், பெண்ணுரிமையை நிலைநாட்டும் வகையிலும் பெண் குழந்தை…

சூர்யா ஓ.கே. சொன்னால்தான்…..

தோல்வி என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் எப்படிப்பட்ட மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதற்கு இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்திய உதாரணம். ‘மின்னலே’ தொடங்கி ‘நீதானே என் பொன்வசந்தம்’ படம் வரை காதலை கவிதைத்தனமாக சொல்வதில் இளைஞர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற இயக்குனர். ஒரு காலத்தில் இவர் சொன்னதைக் கேட்ட…

இசையமைப்பாளர் ராமமூர்த்தி மறைவு – முதல்வர் இரங்கல்

மெல்லிசை மன்னர்களில் ஒருவரான டி.கே. ராமமூர்த்தி மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “பழம்பெரும் திரைப்பட இசையமைப்பாளரும், மெல்லிசை மன்னர்களில் ஒருவருமான டி.கே. ராமமூர்த்தி மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து…

ஹீரோவாகும் ‘கொலை வெறி’ அனிருத்…

‘3’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘ஒய் திஸ் கொலை வெறி’ பாடல் மூலம் ஒரே இரவில் உலகப் புகழ் பெற்றவர் இசையமைப்பாளர் அனிருத். தன்னை ‘ஒரு பட அதிசயம்’ (one film wonder) என்று சொல்லி விடக் கூடாதென கடுமையாகவே உழைத்து வருகிறாராம். ‘டேவிட்’ படத்தில் இவர் இசையமைத்த…

அடுத்த காதல் ஜோடி ரெடி…?

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று இன்று ஒரு பரபரப்பான திரையுலக காதல் ஜோடி பற்றிய செய்தி ஒன்றை பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இவர்களிருவருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இருவருமே தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனரான பாலா படத்தில் நடித்தவர்கள். சரி…எதற்கு சஸ்பென்ஸ்…அந்த காதல் ஜோடி…யார் என்று சொல்லிவிடுவோம்…ஒருவர் அதர்வா. பாலா…

கௌதம் நடிக்கும் ‘சிப்பாய்’, ‘வை ராஜா வை’…

‘கடல்’ படத்தின் ரிசல்ட் தோல்வியில் முடிந்தாலும் இன்றைய தேதியில் தமிழ் திரையுலகில் இளமையான நாயகனாக இருப்பவர் கௌதம் மட்டுமே. அதனால்தான் ‘கடல்’ தோல்வியடைந்தாலும் அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ‘புக்’ ஆகியுள்ளன. ஏற்கெனவே, ‘சிலம்பாட்டம்’ சரவணன் இயக்கும் படத்தில் நாயகனாக ஒப்பந்தமானார். தற்போது ‘3’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் மகளும்,…

ரூ.1,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது நெம்மேலி திட்டம்

சட்டசபையில் நேற்று கேள்வி–நேரம் முடிந்ததும் பேரவை விதி எண் 110–ன் கீழ் முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஓர் அறிக்கையை வாசித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ சென்னை மாநகரத்தில் நிலவி வந்த குடிநீர்ப் பற்றாக்குறையை போக்கும் வகையில், எனது முந்தைய ஆட்சிக் காலத்தில், 2004 ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 180…