ரவீந்தரன் சந்திரசேகரனின் -லிப்ரா புரொடக்ஷன்ஸ் இப்போது தமிழில் ஒரே நேரத்தில் அதிக படங்களைத் தயாரித்து வரும் நிறுவனமாக இருக்கிறது.
தற்போது இவர்களின் ஏழாவது தயாரிப்பாக ‘ Mr & Mrs கல்யாணம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார்கள். இப்படத்தை ஏ. அமல்ராஜ் இயக்குகிறார். கரு. பழனியப்பன் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயின் மற்ற நட்சத்திரத் தேர்வு நடந்து வருகிறது.
இந்நிறுவனம் ஏற்கெனவே, ‘‘நளனும் நந்தினியும், சுட்ட கதை, கொலை நோக்குப் பார்வை, 1 + 1 = 3 , I – நா ,” ஆகிய படங்களைத் தொடர்ந்து ஆறாவது படைப்பாக ‘ Mr & Mrs கல்யாணம்’ படத்தைத் தயாரிக்கிறது.
இந் நிறுவனத்தின் முதல் தயாரிப்புக்களான ‘நளனும் நந்தினியும்’, ‘சுட்ட கதை’ ஆகிய இரு படங்களின் இசை வெளியீடு இம்மாத கடைசியில் ஸ்விட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் நடைபெற உள்ளது.
“சின்ன பட்ஜெட் படங்கள் என்று சொல்லப்படும் சிறிய படங்கள் FMS என்று சொல்லப்படும் வெளிநாடுகளில் படம் பார்க்கும் ரசிகர்களை அதிகமாகச் சென்று சேர்வதில்லை. அங்குள்ள மக்களுக்கும் சரியாக சென்று சேரும் விதத்தில்தான் எங்களது இரண்டு படங்களின் இசையை வெளிநாட்டில் வெளியிடுகிறோம்.
என்னை மாதிரியான திரைப்படம் ரசிப்பவர்கள் பலர் என்ஆர்ஐ-ஆக இருக்கிறார்கள். எங்களுக்கு இதை மாதிரியான நல்ல படங்கள் வந்தால் ரசிக்கிறதுக்கும் நல்லா இருக்கும். இதன் மூலம் என்னுடைய நண்பர்கள் பலருக்கும் திரைப்படம் தயாரிக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது.
இப்படி விழா நடத்தினால் பல முதலீட்டாளர்களை தமிழ் திரையுலகிற்கு கொண்டு வரவும் வாய்ப்பிருக்கு, என்கிறார் லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்.