ஸ்ரேயா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள தெலுங்குப் படமான ‘பவித்ரா’ தமிழில் ‘பேரு மட்டும்தான் பவித்ரா’ என்ற பெயரில் வெளியாக உள்ளது.
ஜனார்த்தன் மகரிஷி இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசை – எம்.எம். ஸ்ரீலேகா. ரோஜா, தணிகலபரணி, சாய்குமார் மற்றும் பலர் இந்த படத்தில் நடிக்கிறார்கள்.
ஸ்ரேயா, விலைமாதாக நடிக்கும் இப்படத்தின் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் வெளியாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டாக அமைந்து ‘பிளாட்டினம் டிஸ்க்’ இன்னும் சில நாட்களில் வெளியிடப்பட உள்ளது.
இம்மாதக் கடைசியில் இப்படம் வெளியாக உள்ளது.