இன்றைய தேதியில் ஒரு படத்தை விளம்பரப்படுத்துவதில் அவர்கள் படத்திற்கு கிடைக்கும் ‘யு டியூப்’ ஹிட்சைத்தான் திரையுலகினர் முதலில் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
இந்த ஹிட்சைப் பொறுத்து அந்த படத்திற்கான வரவேற்பும் எப்படியிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அஜித், நயன்தாரா, ஆர்யா, டாப்ஸீ நடித்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் இன்னும் பெரியடப்படாத படத்தின் டிரைலர் யு டியூப்பில் இதுவரை 17 லட்சம் ஹிட்ஸ்களை அள்ளியிருக்கிறது.
பெயரிடப்படாத ஒரு படத்திற்கு இவ்வளவு ஹிட்ஸ் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.
இப்படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு குலு மணாலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
