அதர்வா, அமலா பால் நடித்த ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’ படத்திற்குப் பிறகு எல்ரெட் குமார் புதிய படம் ஒன்றை விரைவில் இயக்கவிருக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.
ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பாக எல்ரெட் குமார், ஜெயராமன் இருவரும் இணைந்து “விண்ணைத் தாண்டி வருவாயா, முப்பொழுதும் உன் கற்பனைகள், நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களைத் தயாரித்தனர்.
தற்போது ரவி கே. சந்திரன் இயக்கத்தில் ஜீவா, துளசி நடித்து வரும ‘யான்’ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்து வருகின்றனர்.
தான் இயக்கப் போகும் புதிய படம் காதல் கலந்த நகைச்சுவைப் படமாக இருக்கும் என்கிறார் எல்ரெட் குமார்.