விடிவி கணேஷ், சந்தானம், மீரா ஜாஸ்மின், சொர்ணமால்யா நடிக்கும் ‘இங்க என்னா சொல்லுது’ படத்தில் சிம்புவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
சிம்பு , த்ரிஷா நடித்து கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில்தான் விடிவி கணேஷ் நடிகராக அறிமுகமானார்.
தொடர்ந்து சிம்புவுடன் இணைந்து ‘வானம்’, ‘போடா போடி’ ஆகிய படங்களிலும் நடித்தார். இப்போது விடிவி கணேஷ் முதன் முறையாக நாயகனாக நடிக்கும் படத்திலும் நட்புக்காக சிம்பு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது பற்றி விடிவி கணேஷ் கூறுகையில், “இங்க என்னா சொல்லுது’ படத்தில் ஒரு முக்கிய வேடமேற்று படத்துக்கு மேலும் மெருகூட்டி வருகிறார் சிம்பு. இந்த படத்தில் அவரின் பங்களிப்பு நடிப்பு மட்டும்தான், ஆனாலும் ஒரு குறுகிய வட்டத்திற்குள் அவரை அடைத்துக் கொள்ளாமல் கதையமைப்பிலும், காட்சியமைப்பிலும் பங்கு கொண்டு படமாக்கும் விதத்திலும் உறுதுணையாக இருந்து இதற்கெல்லாம் மேல் எனக்காக இப்படத்தில் இரண்டு பாடல்கள் படி இருக்கிறார் . எனக்கு நடிப்பில் சில சந்தேகங்களை நிவர்த்தி செய்யும்அவரது நட்புக்கு ஈடு இணை இல்லை,” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விடிவி கணேஷ்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஆர் .டி . ராஜசேகர், படத்தொகுப்பு – ஆண்டனி , இசை – தரண், கதை, வசனம் – விடிவி கணேஷ், இயக்கம் – செல்வா.
இசைக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தின் பாடலுக்காக விரைவில் துபாய் செல்ல இருக்கிறார்கள்.