1. Home
  2. Author Blogs

Author: admin

admin

அழகுராஜா – விமர்சனம்

‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் (எ) பாஸ்கன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ என தொடர்ச்சியாக ‘ஹாட்ரிக்’ வெற்றியைக் கொடுத்த இயக்குனர் ராஜேஷ் , ஸ்டார் ஹீரோவாக வளர்ந்துள்ள கார்த்தியுடன் இணைந்து கொடுத்திருக்கும் படம் ‘அழகுராஜா’. முதல் இரண்டு படங்களில் வளர்ந்து வரும் ஹீரோக்களை வைத்து படத்தை இயக்கிய…

இளையராஜா ஒரு மகான் – ஆஷா போஸ்லே

விஜய் டிவி ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் இந்த வாரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருப்பவர் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே. 1987ம் ஆண்டு வெளிவந்த ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ திரைப்படத்தில் இளையராஜா இசையமைப்பில் இடம் பெற்ற ‘செண்பகமே…செண்பகமே…’ என்ற சூப்பர் ஹிட் பாடலுடன் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.…

கனடாவில் ஏ.ஆர். ரகுமான் பெயரில் ஒரு தெரு…

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமானுக்கு கனடாவில் உள்ள  ஒன்டோரியா மாநிலத்தில் ‘மார்க்கம்’ என்ற நகரத்தில் ஒரு தெருவுக்கு ஏ.ஆர். ரகுமான் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர். ரகுமானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவருடைய முழுப் பெயரான ‘அல்லா  ரக்காஹ் ரகுமான்’ என அந்த தெருவிற்கு பெயர் வைத்துள்ளார்கள். பிரான்க் ஸ்கார்பிட்டி…

என் மீது அம்பு விட்டவர்கள்தான் அதிகம் – சிம்பு

‘வேட்டை மன்னன்’, ‘வாலு’ படங்களை கொஞ்சம் தள்ளி வைத்து விட்டு தனது சொந்தத் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அதோடு ‘இங்க என்ன சொல்லுது’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பத்திரிகை பேட்டி ஒன்றில், தன்னைப் பற்றி தேவையற்ற வதந்திகளை பரப்பி…

‘ஆரம்பம்’ – 50 கோடியைத் தொடும் வசூல்…

‘ஆரம்பம்’ திரைப்படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே ஏறக்குறைய 50 கோடியைத் தொட்டிருக்க வாய்ப்புள்ளதென திரைப்பட வர்த்தக நோக்கர்கள் கருதுகிறார்கள். கடந்த வாரம் வியாழனன்று (31-10-2013) வெளியான ‘ஆரம்பம்’ திரைப்படம் உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான திரையரங்குகளில் வெளியாகியது. ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைந்த வாரக் கடைசியில் இப்படத்தின் மொத்த வசூல் உலகம்…

‘ஜில்லா’ பெயர் ஏன் ? – இயக்குனர் நேசன்

‘ஜில்லா’ என்று எதற்கு பெயர் வைத்தேன் என விளக்கம் கொடுத்திருக்கிறார் இயக்குனர் நேசன். விஜய், மோகன்லால் முதல்முறையாக இணைந்து நடிக்க சூப்பர் குட் பிலிம்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரிக்கும் படம் ‘ஜில்லா’. படத்திற்கு ‘ஜில்லா’ என்று பெயர் வைத்தற்கான விளக்கத்தைக் கூறுகிறார் இயக்குனர் நேசன், “ஜில்லா’ன்னு சொன்னால்…

பாண்டிய நாடு – விமர்சனம்

அழகான குடும்பக் கதைக்குள் , ஆக்ஷனை புகுத்தி, அதையும் யதார்த்தமாக சொல்லி தரமான வெற்றியைப் பெற்றிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். இதுவும் ஒரு பழிவாங்கும் கதைதான். அதற்காக அண்ணனைக் கொன்றவுடன் அடுத்த காட்சியிலேயே அதற்குக் காரணமானவர்களை வெட்டி சாய்க்கும் வன்முறைப் படமல்ல இது என்பதை அழுத்தமாக உணர்த்தியிருக்கிறார் இயக்குனர். ஒரு…

ஆரம்பம் – விமர்சனம்

நாட்டையே உலுக்கிய ஒரு சில ஊழல்களை மையமாக வைத்து இந்த பரபரப்பான, ஸ்டைலிஷான ஆக்ஷன் படத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன். ‘பில்லா 2007’ படத்திற்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தன் – அஜித் கூட்டணி மீண்டும் ஒரு வெற்றிக் கூட்டணியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நண்பனைக் கொன்றவர்களை பழி வாங்கும் கதைதான் என…

அடுத்தடுத்து இரண்டு படங்களா ? விக்ரம் பிரபுவின் குழப்பம்…

கடந்த ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் ஒன்று ‘கும்கி’. நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும் , நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு அந்த படத்தின் மூலம் தமிழ்த் திரையுகில் நாயகனாக அறிமுகமானார். ஏறக்குறைய, ஒரு ஆண்டாக வேறு எந்த படமும் ரிலீசாகாத நிலையில் விக்ரம் பிரபுவின்…

250 டாலர் அபராதம் கட்டிய கார்த்தி…

தீபாவளியான இன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள்..எதைப் பார்ப்பது…எதை விடுப்பது…என்றே தெரியவில்லை… சரி , மற்ற நிகழ்ச்சிகளை அப்புறமாக யு டியூபில் பார்த்துக் கொள்ளலாம் என நமக்குக் கிடைத்த கொஞ்ச நேரத்தில், காலையில் பார்த்து ரசித்த ஒரு நிகழ்ச்சி…காஃபி வித் டிடி… ‘அழகுராஜா’ கார்த்தி சிறப்பு விருந்தினராக…