வீட்டுக்குள் புகுந்தவர் மீது ஸ்ருதிஹாசன் புகார்…

shruthi hassan 2_00009பிரபல நடிகை ஸ்ருதிஹாசன் மும்பை, பாந்த்ரா மேற்கு புறநகர் பகுதியில் வசித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன் அவரது வீட்டுக்குள் நுழைந்த ஒருவர் ஸ்ருதிஹாசனைத் தொட்டு அத்துமீறி நடந்திருக்கிறார். சுதாரித்துக் கொண்ட ஸ்ருதிஹாசன், அவனை வீட்டை விட்டு வெளியேற்றி கதவை தாளிட்டுக் கொண்டார்.

இது தொடர்பாக ஸ்ருதிஹாசன் காவல் துறையிடம் புகார் அளித்திருக்கிறார்.

சம்பந்தப்பட்ட நபர் யாரென்பது அவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த காமிரா மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அவர் சம்பவம் நடப்பதற்கு முன்னதாகவே, சில தினங்களாகவே ஸ்ருதி ஹாசனை பின் தொடர்ந்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபர் மீது, 354, 452 ஆகிய பிரிவுகளின் மீது புகார் பதிவு செய்யப்பட்டு அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Read Previous

ஜெயம் ரவி – நயன்தாரா படம் விரைவில் ஆரம்பம்…

Read Next

திருமண செய்திகள் பொய்யானவை… – அசின்

Most Popular