அசின்…யாரென்று ஞாபகமிருக்கிறதா…‘உள்ளம் கேட்குமே’ படத்தில் அறிமுகமாகி ‘எம். குமரன், கஜினி, சிவகாசி, மஜா, வரலாறு, போக்கிரி, ஆழ்வார், வேல், தசாவதாரம், காவலன்’ என அனைத்து முன்னணி நடிகர்களுடன் குறுகிய காலத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
திடீரென ஹிந்தி சினிமா மோகத்தால் மும்பை பக்கம் போனவர். அங்கு ‘கஜினி’ படம் ஹிட்டாக தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும், முன்னணி நடிகையாக இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்.
வளர்த்து விட்ட தமிழ் பக்கமும், அறிமுகமான மலையாளப் பக்கமும் வராமலே இருக்கிறார்.
இருந்தாலும் அசினைப் பற்றிய வதந்திகளுக்கும், செய்திகளுக்கும் பஞ்சமேயில்லை. சமீபத்தில் கூட அவருடைய திருமணம் பற்றிய செய்தி பரபரப்பாக வெளியானது.
ஆனால், அதை கடுமையாக மறுக்கிறார் அசின். அது முற்றிலும் பொய்யான ஒரு தகவல். இப்போதைக்கு திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை, என்கிறார் அசின்.
ம்ம்…அங்கு அவருக்கு எதிரிகள் அதிகம் போல…