‘அழகுராஜா’ தோல்வி, ஆர்யா, ஜீவா-வுடன் இணையும் ராஜேஷ்

arya and jeeva‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்ற இயக்குனர், அடுத்தும் மாபெரும் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ராஜேஷ் இயக்கிய ‘அழகுராஜா’ திரைப்படம் மோசமான தோல்வியைத் தழுவியது.

ஹீரோ கிடைத்து விட்டார் என்ற அவசரகதியில் எந்த கதையும், சுவாரசியமான திரைக்கதையும் இல்லாததால் ரசிகர்கள் ‘அழகுராஜா’வை அதே அவசரத்தில் தியேட்டரை விட்டே அனுப்பி விட்டார்கள்.

இந்த தோல்வி இயக்குனர் ராஜேஷை ரொம்பவே பாதித்து விட்டதாகத் தெரிகிறது.

அதனால், தனது அடுத்த படத்தை மீண்டும் பழையபடியே வெற்றிப்படமாக்குவேன் என்று, தீவிரமாக டிஸ்கஷன் செய்து கொண்டிருக்கிறாராம். இப்போதைக்கு இரு கதைகளை உருவாக்கி வரும் அவர், முதலாவதாக ஆர்யாவுடன் இணைந்து ஒரு படம் இயக்குகிறார்.

அதன் பின் ஜீவாவை வைத்து அதற்கடுத்த படமாக இயக்க உள்ளார் என்று சொல்கிறார்கள்.

ராஜேஷின் ஆஸ்தான நகைச்சுவை நடிகர் சந்தானமும் ஆர்யா நடிக்கும் படத்தில் இருக்கிறாராம்.

நல்லா பொறுமையா டிஸ்கஸ் பண்ணி மீண்டும் மீண்டும் ரசிக்கிற மாதிரியான படத்தைக் கொடுங்க ‘பாஸ்’….

Read Previous

திருமண செய்திகள் பொய்யானவை… – அசின்

Read Next

படத்துக்கு மேல் படம் – மகிழ்ச்சியில் ஸ்ரீதிவ்யா…

Most Popular